#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி
நான் சொல்கிறபடியும் கொஞ்சம் பார். களிமண் பிசைக்கிறவகளின் கைகளாவது நாட்டையும் மொழியையும் பற்றிக் கவலைப்படுவது உண்டா?அவர்களை மாற்றுவதற்காக அல்லது அவர்களுடைய மனத்தில் நல்லெண்ணம் ஏற்படுவதற்காக, நீயும் நானும் ஏதாவது செய்தோமா?ஒன்றும் செய்யாமல், தமிழ்நாடும் தமிழும் வாழ்ந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு காலம் கழிப்பது குற்றம் அல்லவா?மறந்துபோன அந்த யாழைப் பற்றிப் பழங்காலத்துப் பாணரும் விறலியரும் பொருநரும் கூத்தரும் நம்மைப் போல்தான் ஏமாந்த எண்ணம் எண்ணிக் கொண்டு, நல்லவர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். அந்த யாழின் அருமை பெருமைகளை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். அதை வாழவைக்கும் வல்லமைப்பற்றி அவர்கள் எண்ணத் தவறினார்கள். அதனால் தான் அந்த அருமையான கருவி அழிந்தது. அதை நினைத்துப் பார்க்கவும் இன்று ஒரு விபுலாநந்தர் தேவையாகிவிட்டது.
தம்பி!மேடையில் முழங்குவதைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்தாலாவது, இதை எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு உண்டாகும் என்று எனக்குச் சில வேளைகளில் தோன்றுகிறது. இது பைத்தியக்கார எண்ணமாக உன்போன்ற இளைஞருக்குத் தோன்றலாம். ஆனால் அனுபவத்தால் சொல்கிறேன்; மேடை மகிழ்ச்சி நமக்குக் கடமை மறதியை உண்டாக்குகிறது. சிறந்த பேச்சு, நல்ல கைத்தட்டு இரண்டும் சேர்ந்தால் உணர்ச்சித் தணிவு, அடுத்த நிலையாகப் பழைய பிற்ப்போக்கு வாழ்வு-இவைதான் இது வரையிலும் கண்டவை. நம்மை எண்ணித்தான் திருவள்ளுவர் சொன்னாரோ என்னவோ தெரியவில்லை. நமக்காகவே சொன்னதுபோல உள்ளது அந்தக் குறள். நம்மைப்பற்றி நாமே மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியில் மயங்கியிருக்கும்போது, கடமையைப் புறக்கணித்துக் கெட்டு அழிந்தவர்களை நினைத்துக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது எவ்வளவு பொருத்தம்!மேடைப் பேச்சைக் கேட்டுக் கைத்தட்டுவோரைக் காணும் போதெல்லாம்,"இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக"என்ற அந்தக் குறள் என் நினைவுக்கு வந்துவிடுகிறது, என்னை அறியாமல்.
தம்பி!இன்றைய உலகம் வல்லமை மிகுந்த மாமியார் போல் உள்ளது. நம் அருமைத் தமிழகம் மிக நல்ல மருமகளாக உள்ளது. ஆனால் தற்கொலையோ மனவேதனையோ எதிரே வந்து நிற்கதவாறு கப்பற்றவேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. என் கருத்தில் எந்தப்பகுதி யாவது உனக்குத் தெளிவில்லாமல் இருந்தால் அதைக் குறித்து எழுது; தெளிவுபடுத்துவேன். ஏதாவது உனக்கு உடன்பாடு இல்லாமல் கருத்து வேறுபாடாக இருந்தால் எண்ணிப்பார்; அல்லது விட்டுவிடு. நான் என்ன செய்வேன்?நீ எவ்வளவு உண்மையாக உணர்கிறாயோ அவ்வளவு உண்மையாகவே நானும் உணர்கிறேன். இந்தத் தமிழகத்தில் நாம் இருவராவது ஒன்றுபட முடியாதா, பார்ப்போம்.