Wednesday, 18 July 2018

#தலையங்கம்

மனித கனவுகள் சொல்லும் கதை
#பாப்பு


     ஓர் அடர்ந்த காட்டில் இருள் சூழ்ந்த
வேளையில்,தன்னந்தனியாய் நிற்க, என்னை தாக்க வந்த புலியை காலால் எட்டி உதைத்தேன்;திடீரென்று பூரிக்கட்டையால் யாரோ அடிப்பதாய் உணர்ந்தேன்;சட்டென்று திடுக்கிட்டு எழுந்தபோது கனவென உணர்ந்தேன்; நான் உதைத்தது புலியல்ல,என் தாயென விளங்கியது.
"கனவிலோ நான் சாகசக்காரி,
நிஜத்திலோ நான் சாதாரண ஒருத்தி"                                      
"மனித இனத்துக்கே உரியது கனவு",அறிஞர் பலர் கூறுகையில் "விலங்குகளுக்கும் கனவு காணும் ஆற்றல் இருக்கிறது"என சிலதரப்பு வாதிகள் சொல்கின்றனர்.அவ்வாறாயின் விலங்குகளும் கனவில் மனிதர்களைப்போல பேசி,ஆடிப்பாடி, தங்களை சிறந்த கதாப் பாத்திரங்களாக உருவெடுத்துக் கொள்ளுமோ???
     

"தொலைக்காட்சியில் காணும் காட்சிகள் மின்னலைகளால் உருபெற
கனவில் காணும் காட்சிகள் நினைவலைகளால் உருபெருகிறது"
      
" மனிதனின் சிறந்த மருத்துவர் தூக்கம்" என்று ஆய்வுகள் சொல்கிறது,அப்படியானால் 24 மணிநேரமும் தூக்கத்தைப் பெற்று கனவு உலகில் மனம் என்னும் திரையைக் கொண்டு அதில் ஊரைச் சுற்றி, பிடித்த உணவுகளை உண்டு,நிலவுக்கு சென்று ஆடிப்பாடி நாளைக் கழித்தால் உடல்நலம் சீராக இருக்குமோ?அவ்வாறு தான் செய்திருப்பாரோ வருடத்தில் ஆறு மாதங்கள் தூங்கி கழித்த கும்பகர்ணன்.
       சில கனவுகள் நம்மை வியப்பின் விளிம்பிற்கே கொண்டு செல்லும்,
"சூரியன் காலையில் தோன்றயில் அதின் கதிர்களைப் பரப்பும்
மாலையில் தன் கதிர்களை தனக்குள் உள்வாங்கி இருளை உண்டாக்குவது போல"
       சில கனவுகள் எழுந்த மறுகணத்தில் நம் நினைவை விட்டு நீங்கிவிடும். ஏதோ கண்டோம் என தோன்றும். ஆனால் என்னவென நினைவிருக்காது.
"கனவு காணுங்கள்", என்று அப்துல் கலாம் கூறினார். அவ்வாறாயின் நாம் வருடத்திற்கு சராசரியாக 2160 கனவுகள் காண்கிறோம்; நாம் எதிலும் சாதிக்கவில்லையே என ஆசிரியரிடம் கேட்டதற்கு,
                             -அடுத்த வாரம் கனவுகள் மலரும்....

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...