Saturday, 28 July 2018

தலையங்கம்

தமிழகத்தின் தனித் தன்மைகள்

#மதி

தமிழின் தொன்மையை பாதுகாக்கவும்,தமிழின் பெருமையை நிலைநாட்டவும் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவுவதென தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது.சோழ தேசம் தஞ்சையில்  1981-ல்  அந்நாளின் முதலமைச்சரான புரசித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.அம்மடியம்மா , ஆயிரம் ஏக்கரா? ஆம் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றது நம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.அறிவுலகமும் ஆரச்சியுலகமும் போற்றும் வகையில் அமைந்த நம் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2013- லேயே 15,8,929 நூல்கள் இருந்துள்ளன.
சின்னத்தின் விளக்கம்
                  தமிழ் பல்கலைக்கழக சின்னம் உலக உருண்டை,பெருவுடையார் கோவில் கோபுரம்,சுவடிகள்,வீணை,மயில் இவற்றை உள்ளடக்கியதாகும்.
இவற்றின் அர்த்தம்:
           "எங்குமுள தமிழருக்கு உரியதாகும் என்பதனை உலகுருண்டை எடுத்துக்காட்டும்"
           " தங்கிவளர் இடம்தஞ்சை என்ற உண்மை தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் காட்டும்"
             "பொங்குதமிழ் முப்பிரிவைச் சுவடி வீணை பொலிவுமயில் இவை காட்டும்" .
துறைகள்:
              தங்கிலிஷ் தவள்புரண்டு ஓடும் நம் தாய் நாட்டில் தமிழில் இருபத்தி ஐந்து துறைகளா?ஆம் தூய தமிழில் தமிழின் வளம் குறையா வண்ணம் ஐந்து புலன்களும் அவற்றின் கீழ் இருபத்தி ஐந்து துறை பட்டப்படிப்புகளும் இங்குள்ளன.
     1.கலைப்புலம் 2.சுவடிப்புலம் 3.வளர்தமிழ்புலம் 4.மொழிப்புலம் 5.அறிவியல்புலம் இவற்றின் கீழ் இருபத்தி ஐந்து துறைகள் உள்ளன...
சிறப்புகள்: 

           வான்வெளிக்காட்சியில்  தஞ்சை பல்கலைக்கழகம் த, மி, ழ், நா, டு   என்ற எழுத்து வடிவ கட்டிட அமைப்பு கொண்டது.ஒவ்வொரு கட்டிடத்திலும் ஒவ்வொரு புலத்துறை கேசெயல்படுகிறது.வேறொரு கல்லூரியில் வேறொரு  பட்டப்படிப்பை பயிலும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த தமிழ் பட்டப்படிப்பை இங்கு தொலைதூர கல்வி மூலம் பயிலளாம்.

சாதனைகள்:
             தமில்சுவடிகளை தேடி தொகுத்து அறிவியல் முறைப்படி பாதுகாத்தல், அவற்றை புதுப்பித்தல்,வெளியிடல் போன்ற பணிகளை சிறப்புடன் செய்து வருகிறது, ஓலைசுவடித்துறை.நீரகழாய்வுத் துறையோ , ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் புதையுண்ட  கல் நங்கூரங்களை கண்டறிந்துள்ளது.சித்தமருத்துவ துறையோ மக்களிடம் நேரடியாக சென்று தமிழ் சித்த மருத்துவ பெருமையை பறைசாற்றி வருகிறது.தொழில் மற்றும் நிலவியல் துறை பத்து வருடங்களுக்கு முன்னரே சிறந்த தொழில்நுட்ப துறையாக போற்றப்பட்டது.அயலாரின் தமிழ் மொழி ஆர்வத்தை வளர்க்க சீனா, ஜப்பான்,போலந்து,செக்கோசுலோவேகியா,அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா முதலிய பல நடுகளிலிருந்து வந்தோருக்கு தமிழ்மொழி,கலை,இலக்கியம்,பண்பாட்டுக்கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது,அயல்நாட்டுத் தமில்கல்வித்துறை.இவ்வாறு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் சாதனைகள் பற்பல......

         என்னதான் தமிழின் வளம் விண்ணைத்தொட்டாலும் மண்ணைக்கவ்வும் வளக்குமொழி பயன்பாட்டை  மாற்றவியலாது.இயல்,இசை,நாடகம் எனப் பிரிந்து இணைந்து வாழ்ந்து வரும் தமிழை போற்றுவோம்.

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...