மனித கனவுகள் சொல்லும் கதை
#பாப்பு
"கனவு காணுங்கள்", என்று அப்துல் கலாம் கூறினார். அவ்வாறாயின் நாம் வருடத்திற்கு சராசரி 2160 கனவுகள் காண்கிறோம்; நாம் எதிலும் சாதிக்கவில்லையே என ஆசிரியரிடம் கேட்டதற்கு,
"அட பெண்ணே!!! அக்கனவு என்பது உன்னை தூங்கவிடாமல் செய்யும் லட்சியத்தை குறிக்கிறது" என்றார்.
கடைக்கோடி மனிதனுக்கும் உரியதான கனவு சாதனையாளர்களுக்கும்,சரித்திரம் படைத்தவர்களுக்கும் பலவிதமான கண்டு பிடிப்புகளை உருவாக்க உறுதுணையாக இருந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
"எங்கெங்கும் காணிணும் சக்தியடா",என பாரதி கூற, அந்த சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் கொண்டதாய்,ஒவ்வொரு பொருளையும் உருவாக்க வல்லதாய் அணு(atom) விளங்குகிறது. அணுவின் உருவத்தை பற்றி அறிஞர்கள் பலர் ஆராய்ந்தனர். டென்மார்க் நகரைச் சேர்ந்த அறிஞன் ஒருவன் அணுவைப் பற்றி இரவில் பலவாறாக யோசித்து தூங்கச் செல்கிறான்.தூக்கத்தில் ஏதோ ஒரு கனவு அந்த மடையனுக்கு வர ,திடுக்கென்று எழுந்து அவன் மேசையில் இருந்த காகிதத்தில் ஏதோ கிறுக்குகிறான்.காலையில் எழுந்து காகிதத்தைப் பார்க்க ஒன்றும் விளங்காதவனாய் விழிக்கிறான்;அடுத்த நாள் இரவும் அவனுக்கு அதே கனவு வர;சட்டென எழுந்து அவன் ஆய்வுக்கூடத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து ஏதோ கண்டுபிடித்து களிப்பாகியிருக்கிறான்.அதுவே இன்று அனைவராலும் ஏற்கப்பட்ட "போரின் அணுக்கொள்கை".இதுவே நாளடைவில் "குவாண்டம் கொள்கைக்கு" அடித்தளம் ஆயிற்று.
"சூரியனைச் சுற்றி கோள்கள் வலம் வருவது போல-அணுவில்
அணுவின் கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட சக்தியுடன் பயனிக்கிறது".
என்று கூறிய அறிஞனே 1922 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போர். இக்கண்டுபிடிப்பே இயற்பியலின் ஆடித்தளமாக விளங்குகிறது.
அடடே! அரிய கனவு; அரிய கண்டுபிடிப்பு.
'காணும் கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறது', என்னும் ஐயன் வாலன்ஸின் கருத்து இன்று தான் எனக்கு விளங்குகிறது.
சிறுவயதிலோ என் பாட்டி,கனவில்
,"வீடு தீப்பற்றினால் வீட்டில் பெண் தாவணிகட்டுவாள்,
காரியமாவது போல் தோன்றினால் வீட்டில் யாரோ மூன்று முடிச்சு போடுவர்;
கல்யாணம் ஆவதுபோல் தோன்றினால் யாரோ எட்டு காலில் செல்லுவர்;
பாம்பு துரத்துவதுபோல் தோன்றினால் கஷ்டங்கள் வரும்,
பாம்பு கடிப்பதுபோல் தோன்றினால் 71/2 வரும்;
வெள்ளப்புடவையில் பெண் வந்தால் மாரியம்மா"
என்று அர்த்தங்களை அள்ளிவிட "அப்படியா அம்மாச்சி" என வாயைப் பிளந்து கேட்ட காலங்கள் உண்டு.இவ்வாறு கனவுகள் வந்தால் இந்தெந்த பலன் என மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் பெண்களைக் கண்டு சிரிப்பதா?அழுவதா?
அதேபோல், ஒரு பெண்ணிற்கு வந்த சுவாரசியமான கனவு இது,
கனவில்...
-கனவுகள் மலரும்....

No comments:
Post a Comment