Thursday, 12 July 2018

#கவிதைகள்

கௌரவப்பெண்மை:
#கழுத

தெய்வம் என்று சொல்லி பல சிலைகளை
கருவறைக்குள் வைத்துள்ளோம்

கருவறை சுமக்கும்  அன்னையை 
ஏனோ சமையலறையிலே பூட்டிவிட்டோம்

பரு முளைத்த பருவம் முதல்
கரு சுமந்த தருணம் வரை
அவள் மெய்ப்பட்ட துன்பத்தை
மெய்யாலுமே சொன்னவன் எவனோ?

பறவையாய் பறந்து
புருவமதை  உயர்த்தி
உயர்ந்தவன் என்னும் அறியாமை கொண்ட ஆணை
போர்க்களத்தில் சந்திக்க இருந்தவளை
போக்கத்தவள் என்றது சமூகம்

இன்னும் சிலரை
சீமாட்டி என்று சீலை உடுத்தி
சீர்குழைத்தது சமுகம்
தீட்டு தீட்டு என்று சொல்லியே
அவள் இதயத்திற்குள் ஈட்டியை எறிந்தனர்

பாவப்பட்ட அந்த பெண்ணினம்
இருமனம் இணையும் திருமணத்திலும் சிக்கியது

விலங்கு என நினைத்தோ அவள் மனதை
விலங்கிட்டு வனத்திற்குள் வைத்தனர்

மீட்க வந்த மாவீரன் என அவனை நினைத்தனர்
ஆனால்
ராமனையே மணந்தாலும் வனவாசம் உறுதி என்பதை
வனரோஜா மறந்தாள்.



No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...