Sunday, 15 July 2018

#கடிதம்

#தமிழனுக்கு ஒரு கடிதம்

#மிகலி

அன்புள்ள எழில்,
        நீ எழுதிய கடிதங்கள் சுவையாக இருந்தன.
தம்பி!இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பகுதிகளில் ஒன்றை மட்டும்போற்றுகிறவன் உறுபடியாவதில்லை. உடலை மட்டும் பொற்றி உரமாக வைத்திருப்பவனும் அழிகிறான். அவனுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்திக் கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தைமட்டும் தூய்மையாகப் போற்றிக் கப்பற்றுகிறவனும் இடைநடுவே அல்லல்படுகிறான்;அவனுடைய உடல் பல நோய்க் கிருமிகளுக்கு இடம் கொடுத்து அவனுடைய உள்ளத்தில் அமைதியைக் கெடுத்து அல்லல் படுகிறது.உடலும் வேண்டும், உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும். மரம் வானளாவ உயரவேண்டியதாக இருக்கலாம்; ஆனால் தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது. இந்த உண்மையை நன்றாக உணர்ந்தவர் திருவள்ளுவர். அறநெறியும் வேண்டும். பொருள்வளமும் வேண்டும். இன்ப வாழ்வும் வேண்டும் என்று உணர்த்தும் நூல் திருக்குறள் தான். அறத்தை நினைந்து பொருளை மறக்கும்படியாகத் திருவள்ளுவர் கூறவில்லை. பொருளையோ இன்பதையோ போற்றி அறத்தை மறக்கும் படியாகவும் அந்தப் பெருந்தகை கூறவில்லை. உலகத்து நூல்களில் பல அறம் பொருள் இன்பம் மூன்றில் ஒவ்வொன்றை மட்டுமே வலியுறுதிருப்பதைக் காணலாம். வாழ்க்கையின் பல பகுதிகளையும் போற்றி வாழவேண்டும் என்பதை உணர்த்த வந்த திருவள்ளுவர் இந்த மூன்றையும் தெளிவுறுத்தியுள்ளார். தமிழராகிய நாம் திறவள்ளுவரைப் பெற்றிருக்கிறோம்; திருக்குறளைப் பெற்றிருக்கிறோம். நம்மில் சிலர் அந்த நூலைக் கற்றும் இருக்கிறோம். ஆனால் திருவள்ளுவர் கூறியபடி வாழவில்லை; நல்ல தன்மை தேடுகிறோம்; வல்லமை தேடவில்லை. அதனால்தான் தாழ்வுறுகிறோம்.

நீ உடனே இதை மறுக்க முன்வரக் கூடும். அதற்கு முன்பே நான் காரணம் சொல்லி விளக்கிவிடுகிறேன்.

தமிழ்மொழி நல்ல மொழி தான்; ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா?பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா?இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்படவில்லையா?தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்கு தந்தோமோ?நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமோ?ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா?இல்லையானால் வெறும் பேச்சு ஏன்?
வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி!அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான்.

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...