Saturday, 28 July 2018

தலையங்கம்

இந்திய மருத்துவச் சந்தை

#கழுத

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு,மொழிவாரியான மாநிலங்கள்,அவற்றின் மாறுபட்ட கலாச்சாரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்ததே, இந்தியா.
இப்படி ஒரு தேசம் உலகில் வேறு எங்கும் இல்லை
நம் பலமே;நம் பலவீனம்
ஆம்,ஒன்றுபடுதல் நம் பலமென்றால்;தேவையானவைக்கு ஒன்றுபடாததே நம் பலவீனம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக(பணநாயக)நாடு;உலகின் மிகப்பெரிய அரசியல் அமைப்பு சட்டத்தை கொண்டுள்ள ஒரு நாடு;உலக மக்கள்தொகையில் இரண்டாமிடம்;பெண்களுக்கு பாதுகாப்பற்ற தேசங்களின் பட்டியலில் முதலிடம்;நீரிழிவு நோயில் முதலிடம்;சக்கரை நோயில் முதலிடம்;அப்பப்பா எத்தனை பெருமைகள்,நினைக்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
100 கோடி மாளிகையில் வாழுபவனும் இந்தியாவுல தா இருக்கா; கடைக்கோடில ஒருவேளை கஞ்சிக்கு கஷ்டப்படுறவனும் இந்தியாவுல தா இருக்கா.
வயித்துக்கே வழியில்லாதப்போ வைத்தியம் பார்த்து என்ன பண்ணப்போறங்குற அவன் கேள்வி நியாயம் தான.
ஏழைகளுக்கான இலவசக் கல்வி
ஏழைகளுக்கான இலவச மருத்துவம்
இதுதா இந்தியா அரசியல் தலைவர்களோட உயிர் மூச்சு,ரத்த ஓட்டம் எல்லாமே.இதுல,எந்த இலவசமும் இதுவரைக்கும் ஏழைக்கு கிடைச்சதே இல்ல.அவனுக்கு தா பணக்காரர்களுக்கு உழைச்சு கொட்டவே நேரம் சரியாய் இருக்கே,பிரகெப்படி இலவசத்த பற்றிலா யோசிப்பா அந்த கிருக்க.கடைசில அவனுக்குன்னு இலவசமா வரத்து நோயு மரணமும் தா.நோய் வந்த அவன் துன்பப் பட்டு இறப்பதை விட, கடன்பட்டே அதிகம் இறந்து போகிறான்.
இங்கே தான் இந்தியாவோட மருத்துவச் சேவை கேள்விக்குள்ளாக்கப் படுது.
ஒரு அம்மா ,இந்தியாவுக்கு வந்து சேவை செஞ்சு நோபல் பரிசு வாங்கினாங்க.ஆனா,இப்போ மட்டும் வந்தாங்கனா,ஆள விடுங்கடா சாமினு ஓட்டமா ஓடிருப்பாங்க.அந்தளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிருக்கு.
அப்போ,மருத்துவத்துறை வளர்ந்திருக்கானா,நிச்சயமாகவே வளர்ந்திருக்கிறது.
புதிய புதிய கருவிகள்;
புதிய புதிய சிகிச்சை முறைகள்;
புதிய மருத்துவமனைகள்
எல்லாமே அதிகமாகியிருக்கு;ஆயினும்,நோய்கள் கட்டுப்படுத்தப்படல;கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.
காரணம் :மைய மருத்துவச் சேவை
பரவலாக்கப்படாத மருத்துவச் சேவையே பரவி வரும் நோய்களுக்கான காரணம்.இந்தியாவின் மருத்துவத் திட்டங்கள் அனைத்தும் தவறுகளைச் சீர்செய்யக் கூடியவையே;இருந்தும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறியதன் பக்கவிளைவே இன்று இந்த நிலைமை.இந்தியர்கள் வைக்கோல் வீரர்களாகவே இருந்து வந்துள்ளோம்;செயல்வீரர்கள் ஆகியிருந்தால் உலகமே நம்மை உற்று நோக்கி நம் திட்டங்களைக் காலவாடியிருக்கக் கூடும்.
சந்தையின் அடுத்த வார நிலவரம் தொடரும்.

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...