Friday, 31 August 2018

#பதிவுகள்

#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி


தமிழரிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களை செய்யாதே ;
அத்தகைய சொர்களை சொல்லாதே ; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே தமிழருடைய ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல் செய்யல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவை நாடாதே. சுவை அற்றுஇருந்திலும் பின்னவை போற்று.

கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நம்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களை விட நாட்டுமக்களின் நன்மையே பெரிது என்று உணர்.
தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல. இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது. ஆகவே, இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கருது. ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை என்று பாரதியார் கண்ட கனவை போற்று. வரியவர்கைகளைக் காணும் போதெல்லாம் இதை நினை. நீ உணவு உண்ணும் முன்பு ஒரு நொடிப்பொழுதில் கண்ணை மூடி, இலையில் உள்ள உணவு ஏழைத் தொழிலைகளிடம் உழைப்பால் ஆனது என்று எண்ணு.  வாரத்திரற்கு ஒரு நாளெனும் நீ வாழும் வீடு ஏழைத்தொழிலகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு.  நீ உடுக்கும் உடை முதலினும் ஏழைத்தொழிலைகளின் உழைப்பால் ஆனது என எண்ணு. அந்த ஏழை குடும்பங்களில் பிறந்தவர்கள் உன்னைப் போல உண்ண முடியவில்லை என்பதையும், உன்னைப் போல் கல்வி கற்க முடியவில்லை என்பதையும் என்னு. அவர்கள் உயர வேண்டும் என்று கசிந்திருகு. இன்றைய எண்ணமே வருங்கால அமைப்புக்கு வித்து. ஆகையால் உண்ணுவதால் பயனுண்டு என்று நம்பிக்கையோடு எண்ணு

*so long as the millions live in hunger and ignorance,I hold every man a traitor who,having been educated at their expense,pays not the least heed to them.*விவேகானந்தரின் இந்தமணிமொழியை மறவாதே.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற நல்ல நிலை வரவேண்டும்,உலகம் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால்,நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்றும் அறிந்துக்கொள். அதுவரையில் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே.ஊருக்கெல்லாம் போதுக்காவல் சிறந்த முறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம்தம் வீட்டைத் தாளிட்டு காத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?அதுபோல உலகத்திற்கு பொதுவான ஒரு சிறந்த ஆட்சி முறை ஏற்படும் வரையில் நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக்கொள்ள வேண்டும். அது குறுகிய நோக்கம் அல்ல. இன்றி அமையாத கடமை என்று உணர்ந்துக் கொள்.

உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம் உயர்வு மானம் ஆகியவற்றை நாட்டிற்காக விட்டுக்கொடு.

தலைமை உன்னை தேடிக் கொண்டு வந்தால் வரட்டும்; நீ அதை தேடிக்கொண்டு போய் அலையாதே. நீ தேட வேண்டியது தொண்டு. தலைமை தாக்குவதும் ஒரு வகை தொண்டு தான். தன்னலம் அற்றவற்கு அது பொறுப்பும் சிக்கலும் மிகுந்த தொண்டு. அத்தகைய தலைமை பொறுப்பு எப்போதாவது உன்னை நாடி வந்தால் ஏற்றுக்கொள். ஆனால் தொண்டுக்கு முந்தி தலைமைக்கு பிந்தி என்பது உன் நெறியாக இருக்கட்டும்.

Wednesday, 29 August 2018

தலையங்கம்

தமிழக ஊர்களின் சிறப்புகள்

                தேனி

#நிலா,
        உலகையே சுற்றி திரிந்து கொண்டிருக்கும் நான் கண்ட அதிசய, அழகிய மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு சிறந்த மாவட்டத்தைப் பற்றி கூறுகிறேன்.
              "அன்பும் பண்பும் வளமும் செழிப்பும்
              கொண்டு எழில் மிகுந்த இடமாக திகழும்
              இயற்கையின் குழந்தை என்று அழைக்கப்படும்
              தேனியின் அருமை பெருமைகளை காண்போம்"
சீரும் கங்கையை சீசாவில் அடைக்க நினைக்கும் செப்படி வித்தைக்காரனைப் போல, தேனி மாவட்ட அருமை பெருமைகளை சில பக்கங்களில் நிரப்ப முயற்சிக்கிறேன்.
            " இது ஒரு சுரங்கம். தோண்ட தோண்ட தொடர்கிறது
              இது ஒரு சாரகம். தேட தேட விரிவடைகிறது.....
              கண்ணகி கோட்டம் முதல் சின்னமனூர் செப்பேடுகள் வரை
              சமணமலை முதல் மேகமலை வரை ...ஆயிரமாயிரம் உண்டு.
தோற்றம்:
            1996 வரை தன் எழில்மிகு செழிப்பை மதுரையினுள் அடக்கி,1997 -இல் எரிமலையாய் வெடித்து மதுரையிலிருந்து பிளவுப்பட்டு அதன் வளத்தையும் பெருமையையும் காட்டத் தொடங்கியது.
           இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திரும்பிய  திசையெங்கும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும் மலைகள் தான்.
        ' உயிரற்ற கல்லும் மலையும்  கண் சிமிட்டி  பார்க்கும்அளவிற்கு பச்சை பசேலென்று நிலங்களும் ,பயிர்களும்,அக்கல்லும் மலையும் எழுந்து நடமாடும் அளவிற்கு பற்பல இசைகளைக் கொண்ட இயற்கையான தூய்மையான காற்றும் 'இவ்விடத்தின் அதிசய சிறப்பு.
பெயர்க்காரணம்:
             தேனியில் தற்போது உள்ள " நேரு சிலை"அமைந்துள்ள இடம், அந்த காலத்தில் " முக்கூட்டுச் சாலை " எனப்பட்டது.இவையே இவ்வூருக்கு தேனி என பெயர்சூட்டக் காரணம்.
           அந்த முக்கூட்டு சாலையில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அருகில் உள்ள  சந்தைக்கு வரும் விவசாயிகள் ஓய்வு எடுக்கும் இடமான அம்மரம் விளங்கியது.
   தூரத்தில் இருந்துப் பார்க்க அவ்விடம் கூட்டமான தேனீக்கள் மொய்ப்பது போல தெரியுமாம். இதனால்" தேனி "என்றழைக்கப்பட்டது.
தேனிக்குச் சிறப்பான அதன் இயற்கை அமைப்பு:
           நம் அனைவரின் மனதை நிம்மதியக்கும் வகையில் இயற்கை வளமும் , பசுமையும் மேற்கு தொடர்ச்சி மலையும் மற்றும் இயற்கையின் வனப்பும் செழிப்பும் அடடே! என்ன ஒரு அழகு.
        முல்லைப் பெரியாறு அணை , மஞ்சளாறு அணை, சொத்துப்பாறை அணை, வைகை அணை, சண்முகாநதி அணை என நீர் வளம் நிறைந்த பகுதி.
        இத்தகைய இயற்கை அமைப்பிற்கு முக்கிய காரணமாக விளங்கும் தென்மேற்குப் பருவகாற்றும், வடகிழக்குப் பருவகாற்றும், அதோடு மட்டுமல்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் நம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் முல்லை பெரியாறும்,வைகை ஆறும் பாய்ந்து செழிப்பினை மென்மேலும் அதிகரித்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தேனியின் வேளாண்மை பற்றி சிறிதளவு:
           வேளாண்மை என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் விவசாயிகளே. "நிலம் ,நீர் ,காற்று "இவையனைத்தும் நம் வாழ்வின் ஆதாரமாக விளங்குவது போல,விவசாயிகளும் நம் வாழ்வின் முக்கிய ஆதாரங்களே.
     " அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை "என்று கூட நாம் சொல்லலாம். தேனியின் இத்தகைய பெருமைக்கும் ,செழிப்பிற்கும் ,வளத்திற்கும்  முக்கிய காரணமும் இவர்களே.
தமிழகத்தின் 50 % உணவு தேவைகளை பூர்த்தி செய்வது நம் தேனியே. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா, உலகம் முழுவதும் தேனியின் பெருமை பரவியுள்ளது.
' நெல்,கரும்பு, திராட்சை, காலிப்பிளவர்,முட்டைகோஸ், பீட்ருட், கேரட் ,முள்ளங்கி போன்றவற்றையும்
   பருத்தி, சோளம், கேழ்வரகு, முந்திரி, பயறுவிதைகள்,தென்னை, பலா, வாழை, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, கருப்பு திராட்சை ஆகியவற்றை சென்னை, மதுரை மற்றும் பல அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
             டெல்டாவுக்கு அடுத்து நெல் விளையும் பகுதி நம்' கம்பம் பள்ளத்தாக்கு' அவை நம் முல்லை பெரியாறு பாசனத்திலே.பல ஊர்களின் காய்கறிச் சந்தைகளிலும் உள்ள ஒவ்வொரு விளைபொருளுக்கும் தொப்புள் கொடியாக கம்பம் பள்ளத்தாக்கு விளங்குகிறது.
            நம் ஊர்களில் கிடைக்கும் இனிப்பான திராட்சையின் பிறப்பிடமும்நம் தேனியே. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது 'கரும்பு' ,அத்தகைய சுவை மிகுந்த கரும்பினை பெரும்பாலும் அளிப்பது சின்னமனூர், பெரியகுளம்.
      வெளிநாடுகளுக்கு பறக்கும் சின்னமனூர் வெற்றிலைக்கு தனிச் சிறப்பு உண்டு.
போடிநாயக்கனூர் என்றவுடன் நம் அனைவரின் நெஞ்சத்திலும் நீங்கா இடத்தைப் இடத்தை பிடிப்பது 'ஏலக்காய் தான்'.
                         " தேனி என்றாலே மனக்கும் ஏலக்காய் தானே" அடடே!
     அங்கு சாகுபடி செய்யப்படும் இலவச பஞ்சும் ,இவ்விடத்திற்கு தனி மவுசினை சேர்க்கிறது.
     சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் பஞ்சுகள் மென்மையான மெ த்தைகள் செய்யப்பட்டு காஷ்மீர், ஊட்டி, சீனா, நேபாளம் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
       ஆனால் இதனைப் பொறுக்காத அரசு" நியூட்ரினோ" என்ற திட்டத்தை கொண்டு விவசாய நிலங்களையும், இயற்கையின் செழிப்பையும் அழிக்க முன்வந்துள்ளனர்......
                                                                                  _ தேனியின் சிறப்புகள் தொடரும்...


Monday, 20 August 2018

#பதிவுகள்

#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி


தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது.தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் ஆனால்தவிர, தமிழுக்கும் எதிர்காலம் இல்லை என நம்பு.ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும்.கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்கவேண்டும்.குறைகள் பல இருக்கலாம்.குறைகளுக்காகத் தயங்காமல் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்க வேண்டும் என்று உணர்ந்திடு.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் போதாது.உன்னால் ஆனவரையில் செய், கடிதம்,மணியார்டர்,விளம்பரப்பலகை ,விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக.(மராத்தியர், குஜராத்தியர் முதலானவர்களிடம் இந்த வழக்கம் உள்ளது.)இவற்றை தமிழில் எழுதினால்,தபால்காரர், வியாபாரிகள்,வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழ் படிக்கச் செய்வது போல் ஆகும்.இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வதுபோல் ஆகும்.நீ யாருடனும் தமிழிலே பேசு.(உலகத்தார் எல்லாரும் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகின்றார்கள்.)தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் பிறமொழியில் பேசு.திருமணம், வழிபாடு முதலிவற்றைத் தமிழில் நடத்து.

சாதி, சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்;மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்.'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'என்ற செம்மொழியைப் போற்று.

நான்குபேர் சேர்ந்தால்,அவர்களிடையே பண்பாலும்  செயலாலும் கருத்தாலும் கொள்கையாலும் ஒற்றும்மையும் உண்டு; வேற்றுமையும் உண்டு.ஒற்றுமையான  பகுதிகளை மட்டும் எடுத்துப் பேசு.வேற்றுமைப் பகுதிகள் இங்கு இப்போது வேண்டியதில்லை என்று விட்டுவிடு.வேற்றுமைப் பகுதிகளை வலியுறுத்திப் பேசினால் பொதுவேலை நடக்காது என்று நம்பு.

வெளிநாட்டுத் துணியை விலக்குதல் போல்,தமிழநாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாள்களை விலக்கு.நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையங்களைப் போற்றாதே.உன் காசு அவற்றிற்குப் போகாமல் காத்துக்கொள்.நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உடையவர் நடத்தும் உணவுவிடுதி, மருந்துக்கடை,துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறுது கூடுதலாக இருந்தாலும் வேறு குறை இருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு.அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ தவறு நேர்ந்தால், தவறு என்று உணர்ந்து வருந்து. அதற்குத் தண்டனையாக ஓர் அணா அல்லது இரண்டணா தனியே எடுத்து வைத்துச் சேர்த்து ஒரு சங்கத்திற்கு கொடுத்து விடு.கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.

உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் நாட்டையும் மொழியையும் தூற்றாதே;பழிக்காதே; வெறுக்காதே.அயலானின் தாயைப் பழித்து வெறுக்காமல் நம் தாயினிடம் அன்பு செலுத்தமுடியும்.அத்தகைய அன்பு தான் நிலையானது;நீடிப்பது.மற்றவர்களின் அமைப்புக்களையும் நிலையங்களையும் விலக்குதல் என்றால்,அவர்களை வெறிப்பதும் பழிப்பதும் பகைப்பதும் வேண்டாம்.ஏன் என்றால் வெறுத்தல், பழித்தல், பகைத்தல் இவைகள், உடையவனைக் கெடுக்கும் பண்புகள்;

இவை சேர்ந்தாரைக்கொல்லி என்று திருவள்ளுவரால் கூறப்படுவது போன்றவை.இன்று அயலாரிடம் செலுத்தும் வெறுப்பும் பழியும் பகையும் அவர்கள் வாளா இருந்தால், நாளை திரும்பிவந்து நம்மவரிடையே செலுத்தத் தூண்டும்.இறுதியில் நம்மவரையே வெறுக்கவும் பழிக்கவும் பகைக்கவும் முனைவோம்.ஆகவே தற்காப்புப்  பண்புகளாகிய அன்பு பற்று கடமையுணர்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வோம்;தன் அழிவுத் தன்மைகளாகிய வெறுத்தல் பழித்தல் பகைத்தல் ஆகியவற்றை விட்டொழிப்போம்.

Saturday, 18 August 2018

தலையங்கம்

இந்திய மருத்துவச் சந்தை

#கழுத

சிசு மரணம்:
           ஒரு 30,40 வருடங்களுக்கு முன்பு பெண் சிசுக்கொலை நம் நாட்டை பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.அதிலிருந்து பக்குவமாக விடுபட்டு விட்டோம்.ஆனால் இன்று சிசுக்களின் இயற்கை மரணத்தால் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கிறோம்.
         உலக அளவில் நிகழும் சிசுக்களின் இறப்பில் கால் பங்கு இறப்புகள் இந்தியாவில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.
         முக்கியமாக சிசு இறப்பு சதவீதம் அதிகம் வைத்துள்ள மாநிலங்கள்
             உத்திர பிரதேசம்
             மத்திய பிரதேசம் 
             ராஜஸ்தான்
             பீஹார்   
              உத்திர பிரதேசத்தில் சென்ற ஆண்டில் மட்டும் 60,000 சிசுக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
                சிகிச்சை பெறும் 1000 குழந்தைகளில் 45 குழந்தைகள் இறந்துவிடுகின்றன.
               இயற்கையாகவே இத்தனை குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும் நிலையில் கோரக்பூரில் சென்ற வருடம் நிகழ்ந்த சம்பவம் நிலைகுலைய வைப்பதுவே.
            60 குழந்தைகளில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் இறந்துபோயுள்ளனர்.
             சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்திடம் வைத்திருந்த நிலுவைத்தொகையே(60 லட்சம்) இந்த உயிரப்புகளுக்கான காரணமாம்.
              உயிர்காக்கும் கருவிகளுக்கான பணத்தை கூட செலுத்த முடியாத நிதி நெருக்கடியிலா அரசு இருந்திருக்கும்.நிச்சயம் இல்லை. 
       "உயிர் தானே என்ற ஏளனமா?" இல்லை
         "தன் உயிர்க்கு இடர் இல்லை என்ற மெத்தனமா?"
          உயர் மருத்துவச் சிகிச்சைகள் வேண்டாம்;அடிப்படைத் தேவைகள் கூடவா அலட்சியம் செய்யப்பட வேண்டும்.
           பிறகு எதற்காக வரி செலுத்துகிறோம்?
தனி மனித தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே ஒரு நாடு வல்லரசைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
         ராக்கெட் விட்டால் என்ன? போர்க்கப்பல் வாங்கினால் என்ன? சுவரில்லாமல் சித்திரம் ஏது?

மருத்துவக் காப்பீடு :

          காப்பீடு என்பது  எதிர்பாராத வகையில் நிகழும் அசம்பாவித சம்பவங்களுக்கான முன்னெச்சரிக்கை ஆகும்.
           வாகனங்கள் போன்ற பலவற்றிற்கும் காப்பீடு உண்டு.அதேபோல் மருத்துவ காப்பீட்டுத்திட்டமும் உருவாக்கப்பட்டது.இந்திய அளவில் காங்கிரஸ் ஆட்சியில் "ராஸ்ட்ரிய ஸ்வஸ்தா பிமா யோஜ்னா" என்ற காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.அதன் மூலம் ஒரு நபர் அதிகபட்சம் 30,000 ரூபாய் வரையிலும் காப்பீடு பெறலாம், மாதமாதம் காப்பீட்டுக் கட்டணமாக ரூபாய் 30 செலுத்த வேண்டும்.
        இதன் பயன் முழுவதுமாக பொதுமக்களைச் சென்றடையவில்லை.இதனை தற்போது விரிவுபடுத்தி தற்போது "மோடிகேர்" என்ற பெயரில் பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
        இந்தத் திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்களும் 50 கோடி மக்களும் பயன் பெறுவர்.இதன் காப்பீட்டுத் தொகை ரூபாய் 5,00,000 தோராயமாக பார்த்தால் 40 சதவீதம் இந்தியர்கள், வருமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பயன் பெறுவார்களாம்.இந்தக் காப்பீட்டுத் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும் மீதி உள்ளவற்றை மநில அரசுகள் செலுத்துமாம்.இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 50,000 கோடி ரூபாய்.
       இந்தத் திட்டத்தை அலசிபௌ பார்த்தால் அமெரிக்காவின் "ஒபாமா கேர்" திட்டத்தோடு மிகச் சரியாய்  பொருந்தும்.
         அந்த திட்டத்திற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே...அந்த திட்டத்தில் ஒபாமா 2.6 கோடி மக்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கினார்.அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கே 3 கோடி மக்களின் மருத்துவச் செலவிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் என்றால் நமது 50 கோடி மக்களுக்கான 50,000 கோடி ரூபாயை சந்தேகக் கண்ணுடனே பார்க்க வேண்டி உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,ராஜஸ்தான், கோவா,குஜராத் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கு என்று தனியாக காப்பீட்டுத்திட்டங்கள் வைத்துள்ளன.
       அப்படியிருக்கையில், அந்த மாநிலங்கள் சொந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமா,இல்லை "மோடிகேர்" திட்டத்திற்கு நிதி ஒதுக்குமா.
               இரண்டிற்கும் ஒதுக்க வேண்டுமெனில் ,தமிழ் நாட்டில் தெருதோரும் மதுபானக் கடைகள் திறந்தால் மட்டுமே அது சாத்தியம்.
                எந்த வித காப்பீட்டுத் திட்டமும் இல்லாத மாநிலங்களான
                மத்திய பிரதேசம்
                ஹரியானா
                நாகலாந்து
                சிக்கிம்     போன்ற மாநிலங்களுக்கு பலன் கிடைக்குமா என்றால் மேற்சொன்ன மாநிலங்களில் மருத்துவமனைகளே இல்லாத நிலையில் காப்பீடு எங்கிருந்து வரும்.
           மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமான ஒன்று.ஸ்கேன் எடுப்பதற்கு கூட இந்தக் காப்பீட்டை மட்டுமே நம்பி பலர் உள்ளனர்.அவர்களின் நம்பிக்கைக்கு ஒளி ஏற்றி வைப்பதே அரசின் கடமையாகும்.ஒளியேற்றாவிட்டாலும் பரவாயில்லை; குருடனாக்கிவிடாதீர்கள்!!!

                   

Wednesday, 15 August 2018

#தலையங்கம்

தமிழகத்தின் தனித்துவங்கள்

கல்லணை  , கல்லும் களிமண்ணும் சேர்ந்ததே.........
     கி.பி   2- ம்  நூற்றாண்டில் கரிகால சோழனால் திருச்சியில் அகண்ட காவிரியின் குறுக்கே உலகின் மிக பழமையான, இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் கல்லணை கட்டப்பட்டது......
அமைந்துள்ள இடம்:
                திருச்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை அமைந்துள்ளது.காவிரி ஆறானது முக்கொம்பில் கொள்ளிடம் மற்றும் கவிரியாக பிரிகிறது.கவிரியானது மீண்டும் உள்ளாறு, காவிரி,வெண்ணாறு,புது ஆறு என பிரிகிறது.உள்ளாறு மீண்டும் கொள்ளிட்டத்துடன் இணைகிறது.இந்த இடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டிருக்கிறது.வெள்ளத்தின் போது நீரானது கொள்ளிடத்திலும், பாசனகாலத்தில் காவிரி, வெண்ணாறு, புது ஆறிலும் திறந்து விடப்படுகிறது.இதனால் பல லட்சம் எக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்திலிருந்து  காப்பாற்றப்படுகின்றன......
உருவான வரலாறு:
                  பிற்கால சோழன் கரிகாலன் மழைக்காலத்தில் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அழிவதையும் வெயில் காலத்தில் வறட்சி நிலவுவதையும் கண்டு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்தான்.இருப்பினும் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது  எளிதானதல்ல. அதற்கும் வழியை கண்டுபிடித்தார்கள் நம் தமிழர்கள்......
தொழில்நுட்பம்:
                    நாம் கடலில் நிற்கும் போது அலையடித்தால் நம் கால்கள் மணல் அரிப்பினால் மண்ணில் புதையும்.இந்த விந்தையைத் தான் நம் தமிழர்கள் சூத்திரமாகக் கொண்டார்கள்.காவிரி ஆற்றில் பெரும் பாறைகளை கொண்டு வந்து போட்டனர்.மண் அரிப்பினால் பாறைகள்  மூழ்கின.அவற்றின் மீது மீண்டும் பறைகளைப்போட்டு ஒரு களிமண்ணாலானா பசையால் ஒட்ட வைத்தனர்.கீழுள்ள பாறைகள் புதையப் புதைய தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன.இறுதியில் கீழுள்ள பாறைகள் கடின தளத்தை அடைந்தவுடன் பாறைகள் இறங்குவது நின்று போனது.இவற்றின் மீதே 1080 அடி நீளமும் 66 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட கல்லணை அமைந்துள்ளது.......
பெருமை:
            இன்று  சிமென்டால் கட்டப்படும்  அணைகளே 500 ஆண்டுகளில் பலமிழந்து போகின்றன.அவ்வாறு இருக்க கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஒரு அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது அகிலம் போற்றும் அதிசயமே ஆகும்.சங்க காலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக்  கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியத்தை பட்டினப்பாலை,பொருநர் ஆற்றுப்படை பாடல்களும் தெலுக்குச் சோழக் கல்வெட்டுகளும் , திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.பெருமை  வாய்ந்த கரிகாலனுக்கு காவிரி கரையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது....

கல்லணையும் ஆங்கிலேயர்களும்:
                கி.பி.1777ம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அணைக்கட்டி என கல்லணை குறிப்பிடப்பட்டுள்ளது.தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பாசன வரலாற்ற்றில் தனக்கென ஒரு அழியா இடம் பிடித்த சார் ஆர்தர் காட்டன் இக்கல்லணைக்கு  மகத்தான அணை( GRAND ANAICUT) எனப் பெயர் வைத்தார்.அதுவே நிலைத்து விட்டது.

            கல்லாலும் களிமண்ணாலும் ஆன கல்லணை...காலம் கடந்து நின்று கரிகாலனின் பெருமையை பறைசாற்றுகிறது.. 

Tuesday, 14 August 2018

#கவிதை

#கவிதை
#மாயாவி


மொட்டவிழ்த்த மலர்களின்மேல்
பட்டுவிட்ட பனியின் துளிகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன் - என்
பால்யத்தை...

என் சருகுகளுக்கு ஜீவனூட்ட,
காற்றோடு கலந்துவிடாது
காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன் -
பனித்துளிகளுள் ஒன்றிரண்டை...

வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணம்பூசி
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்,
வாடிய பாரிஜாதங்களைச் சுற்றி -
என் வாசனையைத் தேடி...

மழைக்கால மண்வாசனையிடம்
தேம்பிக் கொண்டிருக்கிறேன் -
என் மழலை மணத்தை
கையோடு கூட்டிவரச் சொல்லி...

சக்கரங்களற்றுக் கிடக்கும்
நடைவண்டியையும்
வண்டி பொம்மைகளையும்
தடவிப் பார்க்கிறேன் -
என் அந்தக்கால அந்தரங்களை
அறியும் ஆவலில்...

வானவீதியில் கொட்டிக்கிடக்கும்
விண்மீன்களிடம்
விசாரித்துப் பார்க்கிறேன் -
என் கனவுகள்
விசித்திரமா விசாலமா என்று...

செல்லரித்துப் போன
பென்சில் சீவல்களிடத்தில்
பேசிக் கொண்டிருக்கிறேன் -
என் செல்லக் குறும்புகள் பற்றி...


திக்குக்கொன்றாய்க் கிடக்கும்
பல்பத் துண்டுகளுள்
என் வாய்பட்டதனால் முறிந்தவைகளைச்
சேகரித்துக் கொள்கிறேன்;
சிங்காரச் சிரிப்பொலிகளையும் தான்...

மந்தமாருதத்தினூடே சென்று
தேடிப் பார்க்கிறேன் -
நான் மறைத்து வைத்த
என் முதலிரண்டு பற்களை...

தூசி துடைத்துக்
குலுக்கிப் பார்க்கிறேன்,
களிமண் உண்டியலை -
பைசாவையும்
பாட்டியையும்
பண்டிகைகளையும்
பஞ்சுமிட்டாய்களையும்
பலூன்களையும்
நினைத்துக் கொண்டே...


புருவங்களோடு நின்றுவிட்ட
மழைத்துளிகளை
ஆராய்ந்து பார்க்கிறேன் -
என் சின்னக் கன்னங்களில் வழிந்தோடிய
கண்ணீர்த் துளிகளின்
தூய்மை கண்டறிய...

மாரிக்காலத்துத் தடாகங்களில் நிற்கும்
என் காகிதக் கப்பல்களை
அவ்வப்போது பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் -
தூரதேசம் சென்று
கோலோச்சும் ஆசையில்...

நான் தின்று தீர்த்த
மிட்டாய்களின் பெயர்களை
விரல்விட்டு எண்ணிப்பார்க்கிறேன்;
அவை பத்தைக் கடந்ததும்
எந்த விரல்கொண்டெண்ணுவது என
யோசித்துக் கொண்டே...

இன்றைக்கும்
பாதி வயிறு நிரம்பியவாறே
உறங்கச் செல்கிறேன் -
இன்றைக்காவது
வயிற்றைத் தடவிப் பார்க்க
கடவுள் வருவாரா என்று பார்க்க;
போலித் தூக்கம் தூங்கிக் கொண்டே...


கரைந்து கொண்டேயிருக்கும்
காலத்திடம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்
கண்ணீருடன் -
காணாமல்போன என்னைக்
கண்டுபிடித்துத் தருமாறு...

Sunday, 12 August 2018

#பதிவுகள்

#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி

         பழங்காலத்தில் காலட்சேபங்கள், உபந்யாசங்கள்; இக்காலத்தில் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்; இவ்வளவுதான் வேறுபாடு. பழங்காலத்தில் உருக்கமாகக் கேட்டுவிட்டு வீட்டுக்குப்போய் பழைய இரக்கமற்ற வாழ்க்கையையே நடத்திவந்தார்கள். இக்காலத்தில் உணர்ச்சியோடு கேட்டுவிட்டு வீட்டுக்குப் போய்ப்பழைய கவலையற்ற வாழ்க்கையையே நடத்திவருக்கிறார்கள்.

நாட்டின் நிலைமையை நேரில் கண்டு வறுமையால் வாடுகின்றவர்களின் துன்பங்களை நேரில் உணர்ந்து அடைகின்ற கொதிப்பு வேதனை துடிப்பு எல்லாம் ஓர் அழகான பேச்சைக்கேட்டுக் கைதட்டியவுடன் தணிந்து ஆறிப்போகின்றன. உள்ளம் உணர்ந்த உணர்ச்சி நேரே ஆக்கவேலைக்குப் பயன்படாதபடி, குறுக்கே இந்தப் பேச்சின்பம் பாழ்படுத்துகின்றது. இதுவே அரசியல் காலட்சேபத்தின் பயன்!

பேச்சு அடியோடு வேண்டாம் என்று கூறவில்லை. அதை ஒரு கலையாக்கி அதுவே நாட்டுத் தொண்டு என்று கருதிவிட வேண்டாம் என்று கூறுகின்றேன். கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பேச்சு வேண்டும். அதை ஓர் அளவிற்கு நிறுதிக்கொண்டால் போதும்.

இன்னும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. மேடைப் பேச்சுக்களைவிடச் செய்தித்தாள்களும் வார இதழ்களும் மேலானவை. மேடைப் பேச்சால் தெரிவிக்கப்படும் கருத்து ஒரு நொடிப்பொழுது நெஞ்சில் நின்று உடனே மாறிப்போகின்றது. ஆனால் வார இதழ்களாலும், செய்தித்தாள்களாலும் தெரிவிக்கப்படும் கருத்து மூளையில் ஆழப் பதிந்து நிலையாக நிற்கின்றது. அதனால் பல மாநாடுகளை விட செல்வாக்கு உள்ள வார இதழ் ஒன்று வல்லமையான வேலை செய்கின்றது என்று கூற வேண்டும். முன்பு ஒருமுறை எழுதியதுபோல் பல கட்டை வண்டிகளைவிட லாரி ஒன்று மிகுதியான வேலை செய்ய முடியும் அல்லவா?
             -வரும் வாரமும் தொடரும்.....

#தொடர்கதை

#மரணம் உனதல்ல
#தமிழ் கீதன்
#3

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , "ஏகா ! ஏற்கனவே லேட்டா ஆயிடுச்சு .இட்ஸ் ஓகே பட் இறந்து போன துரைராஜ் பத்தின மொத்த Detail உம் எனக்கு இப்ப உடனே வேணும் " என  தெரிவித்தான் ஆதி.
   ஏகா அங்குஇருக்கும் A2 காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளருக்கு தகவல் அறிவித்தார். அவரும் உடன் சென்று துரைராஜ் பற்றி தகவல்கலை சேகரித்தார்.
பல மணிநேர விசாரணைக்கு பின் தகவல்களை திரட்டி கொண்டு அழுவலகம் வந்தடைந்தர் ஏகாம்பரம்.
 SIR " விசரிச்சா வகைல அவருக்கு நிறைய குட்டி குட்டி பிரச்னைல நிறைய எதிரி இருந்து இருக்காங்க.பட் இவங்க கிராமத்துலேய உள்ள வீரகுமாருக்கு இவருக்கும் பல நாள் பகை இருந்துஇருக்கு.இது முக்க வாசி பேர் கொடுத்த ஸ்டேட்மென்ட  அதுமட்டும் இல்லாம அவரோட சின்ன வயசுல நிறைய பொண்ணுங்க் மேட்டர் ல கூட involve ஆயிருக்காரு பட் இப்போ எதுவும் அந்த மாதிரி இல்லனு எல்லாரும் conform சொல்றாங்க .அரண்மனை மாதிரி அவருக்கு வீடு .அவருக்கு யாரும் கிடையாது.வேலைக்கு சமயகாரர் ,தோட்டத்துகாரர், security ஆட்கள் இருந்து இருக்காங்க.கொஞ்ச நாளாவே அவருக்கு அதிகமா phone பேசிட்டு இருந்து இருக்காரு .அவர் இளம் வயசுல யூஸ் பண்றதுக்கு அவருக்கு தனியா அந்த gym அ வச்சுருக்காரு இப்பயும் அப்பப்போ யூஸ் பண்றதா செய்தி .இவ்ளோ தன் Sir எங்களால் திரட்ட முடிந்தது".
  " Very good  ஏகாம்பரம் ! ம்ம்ம் ....நீங்க சொல்றதலாம் வச்சி பாக்கும் போது வீரகுமர நம்ம first சஸ்பெக்ட ஆ வைக்கணும் னு நினைக்குறேன் .வாங்க late பண்ணாம வீரகுமரர் வீட்டுக்கு போலாம் " துரிதப்படுத்தினான்.
  காவல் துறை வாகனம் வீரகுமரர் வீட்டை வந்த அடைந்தது. வீரகுமரர் , துரைராஜ் கட்சியை சேர்ந்தவர் .இவருக்கும் சீட்டு கிடைப்பதில்  பல தடவை சிக்கல்களும் சண்டைகளும் ஏற்பட்டுள்ளன.
Excuse me mister வீரகுமரர் ,மிஸ்டர் துரைராஜ் சம்பந்தமா உங்கள கொஞ்சம் விசரிக்கணும்".
என்ன S.P , ஆளும்கட்சி வீடு னு தெரியாம நுழைஞ்சுட்டாய " அதட்டடலும் எகதாலமும் கலந்த குரலில் உறுமினான்.
" நீங்களே co operate பண்ணா நல்லா இருக்கும் இல்லனா ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிக்க வேண்டி இருக்கும் .எப்படி வசதி...
   கொஞ்சம் வியர்த்தவனாய் இந்த மிராட்டலுக்குக்கெல்லாம் பயந்தவனல்ல ஆதி என்பதை உணர்ந்தார், வீரகுமார் " சரி , சொல்லுங்க உங்களுக்கு அவன் murder விஷயமா என்ன என்ன கேட்கணும்.
  " உங்களுக்கு துரைராஜ்க்கும் உள்ள சண்டையை பத்தி சொல்லுங்க 
" அவனுக்கும் எனக்கும் ஒவ்வொரு தடவையும் கட்சியில் சீட் கொடுக்கும் போது சண்டை வரும் .இது எங்க கட்சி பயலுங்க பூரா பேருக்கும்தெரிஞ்சதுதான் .போன தடவையாவது எலெக்க்ஷனுக்கு சீட்டு  தர்றப்போ  கூட  அவன்  என்ன கொல்ல ட்ரை பண்ணான் அப்போலாம்  வந்து உங்கள்ட  கம்பளைன்ட்  கொடுத்தேன்  . அப்போ  ஒருபய கண்டுக்கல.  இப்போ எம்.எல்.ஏ எலெக்ஷன் வேற வர போகுது கட்சில எங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு தான் சீட்டுக் கொடுக்கணும்னு முடிவு பண்ணிருந்தங்க இப்போ அவன் இல்ல டேரக்டா எனக்கு சீட் கிடைக்கிற நேரத்துல இப்படி பண்றிங்களே எஸ்.பி என்று பயத்தை வெளிக்காட்டதா அப்பாவியாய்  பேசினார்.


" சரி அப்போ நீங்க அந்த கொலைய பண்ணல . இட்ஸ் ஓகே . பட்  எனிடைம் எப்போ ஸ்டேஷன் கூப்பிட்டாலும் உடனே வரணும் " என்று அதட்டிவிட்டு ஆதி வெளியேறினான் .
எதுக்கும் வீரகுமார் வீட்டுக்கு வாசல்ல நம்ம ஆட்கள மஃப்டி ல போடுங்க . கீப் ஆன் வாட்சிங் ஹிம் . அண்ட் அல்சோ ட்ராக் ஹிஸ் கால்ஸ் " என்று ஏகாவிடம் கூறினான் . ஏகாவும் அவ்வாறே செய்தார் 
 
ஆதியும் ஏகாவும் வெளியேறியதை உறுதி செய்த பிறகு முற்றிலும்  வியர்த்தவராய்  வீரகுமார் ஒருவரை அலைபேசியில் தொடர்புகொண்டார் 

" ஹே ! எனக்கு துரைராஜ் வீட்ல நா  வந்துட்டு போன சி சிடிவி  ஃபுட்டேஜ் வீடியோ எனக்கு வேணும் . அத உடனடியா டெலிட் பண்ணனும் "
 
மறுமுனையில் ," வேணா சாமி ! ஏற்கனவே  போலீஸ் எங்க எல்லாரையும் விசாரிச்சுக்கிட்டு போயிட்டுருக்கு.இதுல மறுபடியும் இதெல்லாம் முடியாது தயவுசெய்து என்ன விட்டுடுங்க  
" என்ன  வேலு ! பயம் போய்டுச்சா ! குழந்தை குடும்பம் ல நியாபகம் இருக்குல்ல 

" ஐய்யா ! என்ன இப்படிலாம் சொல்றிங்க . அப்படி எதுவும் பண்ணிடத்திங்க . நீங்க சொல்றபடி செய்றேன் .  எனக்கு அந்த சிசிடிவி கன்றாவி எல்லாம் ஒன்னும் தெரியாதே . அத எப்படி நா எடுப்பேன் ".

"அதுக்கு நா ஒரு பையன அனுப்பி வைக்கிறேன் . நீ அவன உள்ள மட்டும் கூட்டிட்டு போ நா எப்போ வரணும் கிறத அப்புறம் உனக்கு சொல்றன் " என போனை துண்டித்தார் .

ஆதியின் உத்திரவு படி அவரை ஓட்டுக்கேட்டுக் கொண்டிருந்த ஆய்வாளர்கள் ஆதிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர் 

ஆதியின் மனதில் மகிழ்ச்சி பிறந்தது ஏதோ ஒன்றை  சாதித்தது போல் எண்ணி மகிழ்ந்தான் 

இட்ஸ் ஆல்ரெடி டைம் நவ் 

நாளைக்கு மார்னிங்  டி. ஐ.ஜீ.ட உடனே இன்ஃபார்ம் பண்ணிட்டு
அவனை நாளைக்கு மார்னிங் அரேஸ்ட் பன்னி ஆகணும் .மகிழ்ச்சியால்  பரபரப்பானான் ஆதி . அன்றும் காவல் நிலையத்துலேயே உறங்கினான் காலை 7 மணி அலைபேசி அழைப்பு வந்தது .அழைப்பின் செய்தியை கேட்டு அதிர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தான் ஆதி......

        மரணம் உனதல்ல.....            
  தொடரும்.....
 

Saturday, 11 August 2018

#தலையங்கம்

இந்திய மருத்துவச் சந்தை(3)

கழுத

மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு:
            பல உயிர்களை உருக்கிக்கொண்டிருக்கும் புற்றுநோய்களை தினம்தோறும் அறுவடை செய்யும் sterlite போன்ற தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்,உயிர் காக்கும் மருத்துவத்துறைக்கு ஏன் கிடைக்கவில்லை.
அடிப்படைத் தேவையான விவசாயத்திற்கு தண்ணீர் இல்லையெனும்போது நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.இது தொடருமெனில் பரங்கியனின் பேப்பர் பழக்கத்துக்கு நாம் அடிமை ஆகும் நாள் வெகு தொலைவிலில்லை.
தவறுகளை அரசாங்கத்தின் மீதும் வைத்துக்கொண்டு மருத்துவர்களை மட்டும் வாதம் செய்வது நியாயமாகாது.
உள் நோயாளிகளின் நிலையோ,இதனினும் கொடுமை.பிணி வந்தோருக்கு படுக்கை கூட பாரபட்சமே,முன்வந்தோர்க்கே முன்னுரிமை.அசுத்தத்தாலும் ஆரோக்கியமின்மையாலும் னாய் வந்தோருக்கு,மருத்துவமனைகளில் கூட சுகாதாரத்தை அனுபவிக்க வழியில்லை.அத்தியாவசியங்கள் எல்லாம் அசாத்தியமாகிவிட்டன இந்த பணக்கார நாட்டில்.
பணக்காரர்களின் நோயாக அறியப்பட்ட சர்க்கரை,இன்று ஏழைகளை மட்டுமே வாட்டி வதைப்பது,"என்ன தவம் செய்தனை யசோதா" என்று 3பெருமையாய் உறுமிக்கொள்வதா,இல்லை,"என்ன கொடும சரவணா"என தலையில் அடித்துக்கொள்வதா தெரியவில்லை.
"வேளாண்மைக்கான விதைப்பயிர்களிலோ தட்டுப்பாடு,ஆனால்
நோய்களுக்கான விதைநுண்ணுயிரிகளிலோ மிச்சப்பாடு"
புகையிலை இழுத்தவனக்கு புற்றுநோய் என்பது மாறி,புகையை விளையாட்டுப் பொருளாய் பார்க்கும் குழந்தைக்கும் வந்துவிட்டது.
விடையில்லா வினாக்கள் போல் மருந்தில்லா நோய்களும் இவ்வுலகை விட்டு நீங்கிப் போக வாய்ப்பிள்ளையோ?

Thursday, 9 August 2018

#தலையங்கம்

#தமிழகத்தின் தனிதன்மைகள்
#மதி
கல்லணை  , கல்லும் களிமண்ணும் சேர்ந்ததே.........
     கி.பி   2- ம்  நூற்றாண்டில் கரிகால சோழனால் திருச்சியில் அகண்ட காவிரியின் குறுக்கே உலகின் மிக பழமையான, இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் கல்லணை கட்டப்பட்டது......
அமைந்துள்ள இடம்:
                திருச்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை அமைந்துள்ளது.காவிரி ஆறானது முக்கொம்பில் கொள்ளிடம் மற்றும் கவிரியாக பிரிகிறது.கவிரியானது மீண்டும் உள்ளாறு, காவிரி,வெண்ணாறு,புது ஆறு என பிரிகிறது.உள்ளாறு மீண்டும் கொள்ளிட்டத்துடன் இணைகிறது.இந்த இடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டிருக்கிறது.வெள்ளத்தின் போது நீரானது கொள்ளிடத்திலும், பாசனகாலத்தில் காவிரி, வெண்ணாறு, புது ஆறிலும் திறந்து விடப்படுகிறது.இதனால் பல லட்சம் எக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்திலிருந்து  காப்பாற்றப்படுகின்றன......
உருவான வரலாறு:
                  பிற்கால சோழன் கரிகாலன் மழைக்காலத்தில் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அழிவதையும் வெயில் காலத்தில் வறட்சி நிலவுவதையும் கண்டு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்தான்.இருப்பினும் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது  எளிதானதல்ல. அதற்கும் வழியை கண்டுபிடித்தார்கள் நம் தமிழர்கள்......
தொழில்நுட்பம்:
                    நாம் கடலில் நிற்கும் போது அலையடித்தால் நம் கால்கள் மணல் அரிப்பினால் மண்ணில் புதையும்.இந்த விந்தையைத் தான் நம் தமிழர்கள் சூத்திரமாகக் கொண்டார்கள்.காவிரி ஆற்றில் பெரும் பாறைகளை கொண்டு வந்து போட்டனர்.மண் அரிப்பினால் பாறைகள்  மூழ்கின.அவற்றின் மீது மீண்டும் பறைகளைப்போட்டு ஒரு களிமண்ணாலானா பசையால் ஒட்ட வைத்தனர்.கீழுள்ள பாறைகள் புதையப் புதைய தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன.இறுதியில் கீழுள்ள பாறைகள் கடின தளத்தை அடைந்தவுடன் பாறைகள் இறங்குவது நின்று போனது.இவற்றின் மீதே 1080 அடி நீளமும் 66 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட கல்லணை அமைந்துள்ளது.......
பெருமை:
            இன்று  சிமென்டால் கட்டப்படும்  அணைகளே 500 ஆண்டுகளில் பலமிழந்து போகின்றன.அவ்வாறு இருக்க கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஒரு அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது அகிலம் போற்றும் அதிசயமே ஆகும்.சங்க காலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக்  கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியத்தை பட்டினப்பாலை,பொருநர் ஆற்றுப்படை பாடல்களும் தெலுக்குச் சோழக் கல்வெட்டுகளும் , திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.பெருமை  வாய்ந்த கரிகாலனுக்கு காவிரி கரையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது....

கல்லணையும் ஆங்கிலேயர்களும்:
                கி.பி.1777ம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அணைக்கட்டி என கல்லணை குறிப்பிடப்பட்டுள்ளது.தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பாசன வரலாற்ற்றில் தனக்கென ஒரு அழியா இடம் பிடித்த சார் ஆர்தர் காட்டன் இக்கல்லணைக்கு  மகத்தான அணை( GRAND ANAICUT) எனப் பெயர் வைத்தார்.அதுவே நிலைத்து விட்டது.
            கல்லாலும் களிமண்ணாலும் ஆன கல்லணை...காலம் கடந்து நின்று கரிகாலனின் பெருமையை பறைசாற்றுகிறது..

#தொடர்கதை

மரணம் உனதல்ல  (பாகம் -2)
#தமிழ் கீதன்

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்.காலை 6 மணி .தலை நிறைய விபூதி சந்தனமும் கழுத்தில் மாலையும் அணிந்து வந்த ஏகாம்பரம், ஆதி அவன் இருக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
  சோர்வாலும் நேற்று டி. ஐ. ஜி அலுவலகத்தில் நடந்த நிகழ்வாலும் அவன் கல்யாண நாளைக்கூட, மறந்துபோய் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டார்.

 "சார்,  டைம் ஆச்சு! எந்திருங்க...மேடம் நேத்துல இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க, என்று ஆதியை எழுப்பினார் ஏகாம்பரம். விருட்டென்று
எழுந்தான் ஆதி. தான் வெகு நேரம் உறங்கியது அப்போது தான் அவனுக்கு தெரிய வந்தது.

"ஏகா, கொஞ்சம் கோச்சுக்காம வீடு வரைக்கும் வந்து ட்ராப் பன்றிங்களா? டூவீலர் வீட்ல இருக்கு" என ஏகாம்பரத்தைக் கேட்டான் ஆதி.

ஏகாம்பரம் ஆதியை அவன் வீட்டில் விட்டுச் சென்றான்.

வித்யா... என்று கதவைத் தட்டுவதற்குள் வீட்டின் முன் கதவு விளக்கு எரிந்தது. சோகம் சிறிதும் இன்றி, நேற்று காவல் நிலையத்திலேயே உறங்கி விட்டீற்களா... என அமைதியாய் வினவினாள், வித்யா.

"காபி போடுகிறேன் குடிச்சிட்டு, குளிச்சிட்டு வாங்க, டிபன் ரெடி பன்னிடுறேன்" என சமயலறைக்கு ஆயத்தமானாள்.
"அவள் கையை இழுத்து கட்டி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு, "சாரிடா செல்லம்" என்றான்.
 சிறிது கசிந்த கண்ணீருடன் "சாரி எல்லாம் வேண்டாம். இந்த அன்பு போதும். உங்க சூழ்நிலை என்னனு புரிஞ்சுக்க முடியுதுங்க...டோன்ட் பீல் பேட் " என்றாள்.
 "நீ இருக்கிற வரை என் வாழ்க்கைல எந்த பிரச்சனை வந்தாலும்...சமாளிச்சுருவேன்டி. நீ என் வாழ்க்கைல கிடைச்ச வரம்" புகழ ஆரம்பித்தான் ஆதி.
"இந்த சாக்குலாம் இங்க வேணாம் மிஸ்டர்  எஸ்.பி. ஒழுங்கா ஃபிரீ நாட்கள்ள எங்கையாச்சும் வெளில கூட்டிட்டு போங்க" அன்பாய் அதட்டினாள்.

கண்டிப்பா டியர். சரி காபிலாம் வேணாம் நா ஒன் ஹௌர் தூங்குறேன். எழுப்பிவிடு! என கூறி தன் கட்டிலில் சாய்ந்தான்.
கண்கள் சொருகிய கணத்தில் கனவுகள் கதைகளாய் மிதந்தன.

வித்யா அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். இருவருக்கும் தேர்வு பயிற்சி நிலையத்தில் காதல் பூத்தது. இருவரும் காதல் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர்.

வித்யாவிற்கென யாரும் இல்லாததால் அவள் பக்கத்தில் எந்த தடைகளும் இல்லை.ஆனால் அதுவே ஆதி பக்கத்தில் தடையாய் அமைந்தது.வித்யா அனாதை என்ற காரணம் காட்டி ஆதி வீட்டில் ஏற்க மறுத்தனர். ஆனால் அத்தடையையும் உடைத்து இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.ஆதி வீட்டில் இவர்களை புறக்கணித்தனர்.

வித்யா கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு துணை ஆட்சியராக பொறுப்பேற்றாள்.ஆதியும் காவல்துறை அதிகாரியாக பணியேற்றான். நாளடைவில், இருவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வித்யா கருத்தரித்தாள்.அனைவருக்கும் ஏற்படும் ஆசை தான், கணவன் பெண் குழந்தை வேண்டும் என்பதும்.மனைவி கணவன் போல் ஆண் குழந்தை வேண்டும் என்பதும். ஆதியும் வித்யாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியை ஒழிக்க ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.முதலமைச்சருடன்  அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்திருந்தனர்.தன் அலுவலக ஊர்தியில் அவசரமாய் புறப்பட்டாள் வித்யா.
அவள் சென்ற ஊர்தி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது; கருவும் கலைந்தது. அது மட்டுமின்றி மற்றதொரு அதிர்ச்சி செய்தியும் காத்திருந்தது. ஏதோ ஒரு கம்பி அவள் கர்ப்பப்பையைக் கிழித்திருந்ததால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

"என்னங்க! என்னங்க! மணி 7.30 ஆச்சு .எழுந்திருங்க நேரம் ஆகுது", ஆதியை எழுப்பினாள்் வித்யா.

கண்ணீர் நிறைந்த கண்களைத் துடைத்துக் கொண்டு தன் முந்தைய நாள் வாழ்க்கை கனவாய் ஓடியதை அவன் உணர்ந்தான்.
சிறிதும் வித்யாவிடம் காட்டிக்கொள்ளாமல் குளித்துவிட்டு வித்யா தயார் செய்து வைத்த உணவை உட்கொண்டு விட்டு காவல் நிலையம் சென்றான், ஆதி.

மரணம் உனதல்ல......
-தொடரும்

Tuesday, 7 August 2018

#தொடர்கதை

  சதுர் -1
#நண்பன்     

ஜனவரி 26,2017 வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மும்பை, உயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவில் சீறிப்பாயும் கார்கள், காதைப்பிளக்கும் விமானத்தோட சத்தம், இதெல்லாம் தாண்டி ஒரு அமைதியான இடமும் இருக்கு, மும்பையோட இன்னொரு புறம் இருக்கிற ஒரு கல்லறை.
        பசுமையான புல்வெளிக்கு நடுவே பூக்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பவரின் உறவுகள், சிலரின் உறவுகள்.
படம் -1
        "விஷ்வா"...... 5 வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவோட "illegal" icons -அ அலறவெச்ச ஒரு பேர்.
        ஆனா இன்னிக்கு ஒரு பூங்கொத்தோட தன்னோட மனைவியப் பாக்க வந்திருக்கான், சின்ன சோகத்தோட.
        "மீரா"..... விஷ்வாவோட மனைவி,அம்மா,குழந்தை எல்லாமே அவனுக்கு அவள்தான்.
         ஆனா இன்னிக்கு அவள் இல்லை. காரணம் அவளுக்கு இணையா அவன் நேசிச்ச வேலை...
                       "CBI"
         காலைல பேஞ்ச சின்ன மழைல நனைஞ்ச புல்வெளிமேல ஒரு "car" வந்து நிக்குது.
           விஷ்வாவோட நண்பன் "ஜெகதீஸ்".....ஒரு நேர்மையான "Police officer".
           கைல ஒரு "Blue colour file",Black coat-ல மிடுக்கான நடையுடன் விஷ்வாவ நெருங்குறான்.
           எல்லார் சந்தோஷத்திலேயும், துக்கத்திலேயும் கூட இருந்த ஒருத்தன் இப்போ தனிமரமாக இருக்கான்.
           அவன் அவளோட கடமைய செய்யட்டும்னு கொஞ்சநேரம் அமைதியா நிற்கிறான் ஜெகதீஸ்.
           வழக்கம்போல தன்னோட மனைவியோட கல்லறைல தன்னோட பூங்கொத்த வச்சுட்டு திரும்புற நண்பன் கண்ணுல வர கண்ணீரப் பாத்ததும் ஒரு சின்ன தயக்கம்.
          தான் எதுக்கு வந்தோங்கிறத சொல்லலாமா? இல்ல வேணாமா?-னு யோசிச்சு நிக்குறான் ஜெகதீஸ்.
          இருந்தாலும் பழசையே யோசிச்சிட்டு இருக்கிறது எதையும் மாத்தப்போறதில்லைனு மனச கல்லாக்கிக்கிட்டு விஸ்வாவோட தோள தொட்டு அவன அமைதிப்படுத்துறான் ஜெகதீஸ்.
          அவனிடம் மெதுவாக "விஷ்வா....!  நீ திரும்பவும் department -ல join பண்ணனும்".
          ஒருவித வெறுப்புடன் தன் தோள்-ல கைய வச்ச நண்பனோட கைய எடுத்துவிடுகிறான் விஷ்வா.
          அவனிடம் "உனக்கே தெரியும் ,நான் எதுக்கு இந்த வேலையை விட்டு வந்தேனு, எனக்கு இனி இழக்க எதுவும் இல்ல ஜெகதீஸ்".
          "நான் இனிமேல் தனிமைல இருக்கிறதுதான் சரியா இருக்கும், என்ன விட்டிடு" என்கிறான்.
           கொஞ்சநேரம் அமைதியா இருந்த ஜெகதீஸ் ஒரு கனமான குரலில் "லீ இன்னும் சாகல, He is alive "என்கிறான்.
            "The secret agency has posted some images" என்கிறான்.
            உடனே தன்னோட கைல இருக்கிற files -அ விஷ்வாவிடம் நீட்டினான் ஜெகதீஸ்.
            அந்த files -அ open செய்கிறான் விஷ்வா.
(கதை 5 வருடம் பின்னோக்கி நகர்கிறது........)
                                                               -தொடரும்.......

Monday, 6 August 2018

#பதிவுகள்

#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி

        எழில், தமிழ்ப் பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், இன்றைய கடிதத்தில் நீ எழுதியது போன்ற வீண் கனவு மட்டும் வேண்டாம். மேடைப் பேச்சு நம்முடைய உணர்ச்சி வெள்ளத்திற்குப் பெரிய வாய்க்காலக இருந்து ஆத்திரத்தைத் தணித்து வற்றச்செய்து நம்மைச் சோம்பேறிகளாக ஆக்குவது போல், இப்படிப்பட்ட வீண்கனவுகள் நம்மை வீணர்களாக ஆக்காமலிருக்க வேண்டும் என்று எண்ணத்தால் இதைத் குறிப்பிடுகிறேன். வேறொன்றும் தவறாக எண்ண வேண்டாம்.

நான் எதை வீண் கனவு என்று குறிப்பிடுகிறேன், தெரியுமா?திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும், தமிழ்நாட்டுக் கோவில்களில் உத்தமர்களின் தமிழ்ப்பாட்டு முழங்க வேண்டும், அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், கவர்னர் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்னும் இவைகளை ஒருகாலும் வீண்கனவு என்று ஒதுக்கவே மாட்டேன். இது உனக்கே தெரியும். தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன் தான், இந்த நல்லெண்ணங்களை வீண் கனவு என்று குறைகூறுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது,இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குருக்கிடுவானால், அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.

தம்பி!
          எழில், நீ இன்னொன்று கவனித்திருப்பாய். தமிழராகிய நம்மிடம் ஒரு பெருங் குறை இருந்துவருகிறது. அது வேறொன்றும் அல்ல; பிறருடைய சொல்லால் மயங்கும் பேதைமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டுதான், உயர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்ற முடிகிறது. மக்களுக்குள் எந்த வகையான வேறுபாடும் வேண்டாம். கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்ற உயர்ந்தப் பேச்சைத் தமிழரிடம் ஒருவர் பேசட்டும்;கேட்ட தமிழர் பற்றை உடனே வெறுப்பார், துறப்பார்; எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்கையைத் தொடங்கிவிடுவார். காரணம் என்ன, தெரியுமா?தமிழர்நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டுவந்தது. அதனால், சொல்கிறவர் யார், உண்மையாக உணர்ந்து சொல்கிறாரா, நம்மை எம்மாற்றச் சொல்கிறாரா, அவர் எந்த வேறுபாடும் பார்க்காமல், வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்துப்பார்க்காமல், உடனே தாம் அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொங்கிவிடுவார். இது நல்லதுதான். சொல்லப்பட்ட உண்மயை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லதுதான்.

அதற்கு வழி இதுதான்; தமிழர்களை சிறிது நேரம் உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கடித்துப் பிறகு வறண்ட பாலையில் திகைக்கவிடும் போக்கைவிட்டு, அவர்களைக் கடமைப் பற்றுஉடைய செயல்வீரர்களாக ஆக்க வேண்டும். உன்னுடைய எழுத்தில் அந்த உணர்ச்சிவெல்லத்தைக் கண்டதால்தான் நான் இதை குறிப்பிடுகிறேன். நீ சர்வாதிகாரியாக ஆவதுபற்றி எனக்குத் தடை இல்லை.ஆனால், அந்தப் போதையில் மயங்கி அன்றாடக் கடைமையை மறந்து விடாதே; மற்றவர்களையும் மறக்கவிடாதே.
                 கடிதம் தொடரும்...

Saturday, 4 August 2018

#பதிவுகள்

#சிறகுகள்
#மாயாவி

என் சிறகுகள் மென்மையானவை. வெளிர்நிறம் கொண்ட அவைகளால் தான் இன்றும் பறந்து கொண்டிருக்கிறேன். உயரப் பறக்காவிடினும் சோர்ந்து அமர்ந்ததில்லை. என் சிறகுகளே என் பலம். இப்பூவுலகின் வண்ணங்களை நான் தரிசிக்க என்னை சுமந்து செல்வன என் மென்சிறகுகளே. என் வறண்ட தேகத்திற்கு உயிரூட்டிய ஜீவகாருண்யங்கள் அவை. என்னை நெருங்கும் போதெல்லாம் என் சிறகுகளைச் சற்று கவனித்துக்கொள் அன்பே. தீராத அன்பின் பலத்தால் அவை முறியக்கூடும். ஏனெனில் என் சிறகுகள் மென்மையானவை !

இந்திய மருத்துவச் சந்தை

#இந்திய மருத்துவச் சந்தை

#கழுத

 இந்திய மருத்துவச் சந்தை
நோய் வருவதற்கான முக்கியமான காரணிகள் இரண்டு
ஒன்று:அடிப்படைச் சுற்றுபுரச் சூழல்
மற்றோன்று:மருத்துவக் கட்டமைப்பு அடிப்படைச் சூழலை முழுவதுமாக மாற்றிவிட்டோம்;நம் நாடா என்ற நிலைக்கு தள்ளிவிட்டோம்.மருத்துவக் கட்டமைப்போ "இருக்கு ஆனா இல்ல"என்பது போன்ற நிலை தான்.சில இடங்களில் கட்டடங்கள் உள்ளன,அனால் மருத்துவர்கள் இல்லை.சிலவற்றிலோ மருத்துவர்கள் உள்ளனர்,கட்டடங்கள் இல்லை.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 479 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியுள்ளோம்-130 கோடி மக்களுக்கு.இளையர்கள் அதிகம் உள்ள நாடு என்று பெருமை பேசிக்கொண்டு திரிகிறோமே.அடுத்த 20 ஆண்டுகளில் முதியோர்களை அதிகம் கொண்ட நாடாக பரிணமிக்க போகிறோம்.அப்போது,52 லட்சம் மருத்துவர்களும் ,1000 நோயாளிகளுக்கு 4 மருத்துவர்களும் தேவைப்படுவார்கள்.ஆனால்,தற்போது ஒரு வருடத்திற்கு 67,218 மறுத்துவர்களையே உருவாக்குகிறோம்.மூளையைக் கசக்கினால்,"கணக்கு பிணக்கு ஆமணக்கு கதையில் தான் முடியும்.
இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளை வைத்திருக்கும் மாநிலமான தமிழ்நாட்டிலேயே,சுகாதாரம் ஊசிபோயிருக்கும் நிலையில் மாநிலத்துக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றும் தங்களுக்கு மருத்துவக் கல்லூரியே வேண்டாம் என்று பெருந்தன்மை கொண்ட வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை என்ன?
இன்று ,கூலி வேலைகளுக்காக தென்னிந்திய மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள வடைந்தியர்கள்,நாளை ஆரம்ப சுகாதாரத்திற்காகவும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான் எழுகிறது.மேரிக்கோம், ஹிமா தாஸ் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கி தந்து இந்தியாவின் பதக்கப் பஞ்சத்தை தக்க சமயத்தில் காப்பாற்றி தரும் அந்த மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை செய்துகொடுப்பதும் நம் கடமையன்றோ?
இத்தனை பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு நாம் போராடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தான் உலகமே இந்தியாவை ஒரு மருத்துவச் சந்தையாகச் சிந்திக்க தொடங்கிவிட்டது.உலக வணிகச்சந்தையின் பார்வையில் ஏழையும் பணக்காரனே,அவனுடைய உடல் உறுப்புகள் செயலாற்றுப் போகும் வரை.பிள்ளையின் படிப்பை விடவும்,மகளின் திருமணத்தை விடவும்,தன் உறுப்புகள் பெரிதல்ல என்று நினைக்கும் இந்தியா மாமனிதர்கள் இருக்கும் வரை,செயலற்றுக்கொண்டிருக்கும் பணக்காரர்களின் இதயங்களும் சிறுநீரகங்களும் கவலை கொள்ள தேவையில்லை.
உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில்,உலகத்தின் வல்லரசு நாடுகளோடு போட்டிபோட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்கிறீர்கள்.எது முன்னேற்றம்?,இல்லாதவனிடம் இருக்கும் எல்லாமுமான அவன் உறுப்புகளைப் பிடுங்கி,எல்லாம் இருந்தும் தன்னை சீர்குலைத்துக்கொண்ட கோமளிக்கு தானம் செய்கிறீரே அதுதான் முன்னேற்றமா?
இன்று இந்தியாவில் 1,75,000 சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன,இருப்பதோ ஐயாயிரம் தான்.50,000 இதயங்கள் தேவையில் உள்ளன,இருப்பதோ முப்பது.50,000 கல்லீரல்கள் தேவைக்கு 700 மட்டுமே உள்ளன.தேவைக்கும் இருப்பிற்கும் இருக்கும் இந்த இமாலய இடைவேளை தான் பணம் விளையாட முதல் போடுகிறது.கடைசியில் திருவள்ளுவன் வாக்கு தான் சரியோ,
"பொருள்ளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை",உலகம் இல்லாமல் போகட்டும் உடலும் உயிரும் கூடவா மிஞ்சக்கூடாது.
"எல்லா உறுப்புகளையும் தானம் கொடுத்துவிட்டு வெறும் சுவடோடும் நினைவோடும் வாழ்வதற்கு மனிதர்கள் என்ன மரமா?"
சிந்திப்போம் ; சந்திப்போம் வரும் வாரங்களில்....


Friday, 3 August 2018

தலையங்கம்

மனித கனவுகள் சொல்லும் கதை

#பாப்பு

ஒரு பெண்ணிற்கு வந்த சுவாரசியமான கனவு இது,
    கனவில் ,"ஒரு விஞ்ஞானி அவன் தேவைக்காக ஒரு அசுரன் போன்ற ஒரு உருவத்தை உருவாக்குகிறான்.அதன் பெயர் 'ஃபிராங்கண்ஸ்டைன்';ஆனால் அவன் உருவாக்கிய அசுரனைக் கண்டு நாளடைவில் அவனே பயப்படுகிறான்.இக்கனவு நம்மூர் பெண்களுக்கு வந்திருந்தால் சாமி குத்தம் என சொல்லி பல்வேறு பரிகாரங்களைச் செய்திருப்பர் இப்பேதைகள்.ஆனால் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த அந்த ஜெர்மன் பெண்ணிற்கு வந்த கனவு அவளை அடுப்பங்கறையில் இருந்து அகிலத்திற்கு சிறந்த எழுத்தாளராய் அள்ளித் தந்திருக்கிறது.இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த நாவலை அவள் 18 வயதில் தொடங்கி தனது 20 வயதில் முடித்திருக்கிறார். அதுவே உலகின் முதல் திகிலான அறிவியல் புனைக்கதை "ஃபிராங்கண்ஸ்டைன்".அத்தகைய ஆணாதிக்கம் இருந்த அக்காலத்திலும் தனது கனவை கதையாய் உருவாக்கியவர் தான் "மேரி ஸெல்லி".நாவல் வெளிவந்த ஆண்டோ 1821;ஆனால் அதைத் தழுவி எழும் சினிமா படங்களோ இன்றும் பார்வையாளர்களை "திக் திக் திக்" என பயப்படச் செய்கிறது.
        நாம் பள்ளி பயிலும் போது எவ்வளவு பாடங்கள் இருப்பினும் ,எது கடினம் ??? என யாராவது கேட்டால் முதலில் நாம் சொல்வது கணிதம் தான்.தேர்வு சமயங்களில் அம்மாவிடம்,"இந்தமுறை 100/100 தான்" என சூளுரைத்து சூத்திரங்களை நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்க "மாரியம்மா காப்பாத்து" என விபூதியை வெற்றித் திலகமாய் நெற்றியில் இட்டு பரீட்சைக்குச் செல்வோம்.ஆனால் கையில் பேனாவைப் பிடித்த மறுகணத்தில் சூத்திரங்கள் மறக்க ,"மாரியம்மா ஏம்மா இப்படி பண்றீயேமா?" என புலம்பியிருப்போம்.
ஆனால் ஒருவரையோ, தன் வாழ்நாள் முழுவதும் தினமும் கண்டுபிடிக்க முடியாத சூத்திரங்களுக்கும் விடையளித்து அவரை பெரியாள் ஆக்கியிருக்கிறார் "நாமக்கல்" எனும் பெண் தெய்வம் .அவரே பார்புகழும் கணித வல்லுநர் இராமானுஜம்.அம்மேதை கூறுகையில்,
 "என் கனவில் இரத்தம் வழியும் ஒரு திரையில், திடீரென்று ஒரு கை சூத்திரங்களுக்கு விடை எழுதும்; அதை நான் கவனமாய்க் கொள்வேன்".
     என்று கூறிய அவரே "Infinity" என்று சொல்லப்படும் முடிவில்லா எண்ணிற்கான மதிப்பைக் கண்டறிந்தவர்.அவர் படித்து வாங்கிய பட்டமோ "இளங்கலை கணிதம்"...ஆனால் அறிஞர் பெருமக்கள் தந்த பட்டமோ "கணிதமேதை".

   கனவுகள் ஒரு சாதாரண மனிதனை இந்த அளவு பார்புகழச் செய்யுமோ??!! நம் அறிவுக்கும் அப்பாற்பட்ட கனவுகளால் சிகரம் தொட்டவர்களை நினைக்கும்போது சற்றே உடல் சிலிர்க்கிறது...
                   -கனவுகள் மலரும்...

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...