ஆதலால் காதல் செய்வீர்!
#மாயாவி
‘காதல்’ என்ற வார்த்தைக்கான சரியான புரிதல் எனக்கு இல்லையோ என்றே தோன்றுகிறது. அரைடவுசர் வயதில் 'love' என்று கூறியபோது ‘பளீர்’ என்று முதுகில் வாங்கியது இன்றளவும் நினைவில் வருகிறது. மீசை அரும்பும் பருவத்தில் அகநானூறு வகுப்புகளைத் தோழியர்(!) பக்கம் திரும்பாமலேயே கடத்தியிருக்கிறேன். காதல் கொடியது என்ற நிலைப்பாட்டோடவே பள்ளிப்பருவம் முடிந்தது. கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் எந்தவொரு கலர்ஃபுல் தேவதையும் என்னைக் கவிதையெழுதவைத்ததில்லை. காதலர்களுக்குத் தூதாகச் செல்லும் பாக்கியமும் எனக்கு வாய்த்ததில்லை. காதலானது normal physiologyயாகவே இருப்பினும், எனக்கோ அது abnormal pathologyயாகவே பட்டது. நான் காதலை எதிர்ப்பவனோ வெறுப்பவனோ அல்லன். காதற்கதைகளையும் காதற்சார்ந்த திரைப்படங்களையும் காணும்போதெல்லாம் transient புன்னகை வருவதுண்டு. ஆனால், அவையாவும் endorphinகளின் வேலையேதவிர, androgenகளுக்கு அதில் பங்கில்லை. நான் காதலிக்காத மரமா என்றால், இல்லை. என் காதல் நரம்பிற்கு ‘காதல்’ என்னும் பதம், ஓர் ஆணும் பெண்ணும் கைகோர்த்தவாறு கடற்கரை மணலில் ‘slow motion’-ல் காற்பதித்து நடப்பதுபோன்ற காட்சிக்கும், இறந்த காதலியை நினைத்து நினைத்து உருகும் தாடி வளர்த்தோ வளர்க்காமலோ ‘get up change’ பண்ணும் ‘hero’வுக்காகவுமே பயன்படுத்துவது பிடிக்காமல் இருந்திருக்கலாம். “நான் என் பெற்றோரைக் காதலிக்கிறேன்; என் படிப்பைக் காதலிக்கிறேன்; மருத்துவத்துறையைக் காதலிக்கிறேன்” என்றெல்லாம் கூறும் “good, sincere, obedient, perfect, brilliant, humble student” நானில்லை. நான் ‘அவனும்’ இல்லை. எனது neuronகள் காதலை வேறுவிதமாக சித்தரித்துவைத்துள்ளன. காதல் ஒரு மெல்லிய கனத்த உணர்வு. அது இருபால் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டது. என்னை உன்னை உந்தித்தள்ளும் பேராற்றல் அது. புன்னகை தேசத்துப் பூ அது. காதலால் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல், வரம். காதலை மனிதர்களுக்கு இடையில் நிகழும் வினை என்று மட்டும் வரையறுக்க முடியாது. நானும் காதலித்திருக்கிறேன். பலரைப் பலவற்றைப் பலவிதமாகக் காதலித்திருக்கிறேன். அவர்களுள் சிலர், மனிதர்; சிலர், மனிதர் அல்லர். துரத்தித் துரத்திக் காதலித்ததில்லை; தூரத்தில் நின்று காதலித்திருக்கிறேன். அவர்களிடம் என் காதலைச் சொன்னதில்லை. காதலை வெளிப்படுத்துவதற்கான தேவையும் வந்ததில்லை. நான்மட்டுமே சார்ந்த காதல்பற்றி உலகிற்குக் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. மழையை நனையாமல் இரசிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. அப்படி இரசிக்கும்பொழுதில்தான் maturity பிறக்கிறது என்பேன். காதலுணர்வும் அப்படியே. காதலித்தேதான் ஆகவேண்டும் என்பதில்லை. ஆனால், காதலித்துப் பார்க்கலாம். ஏனெனில் காதல், எதனையும் தாண்டிப் புனிதமானது!

No comments:
Post a Comment