#309
#வினோதினி
#மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்
எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறையின் விளக்க அறைக்குச் சென்றுசேர்ந்தேன்.எப்பொழுத்தும்போல்,எனக்கு முன்னே சென்றவர்கள்,சீனியர் உட்கார்ந்தது போக மீதமிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.வழக்கம்போல்,2 மணி நேர;ஒன்றும் புரியாத வகுப்பில்,என் நில் நெடு பயணம் தொடங்கியது.முடிந்ததும்,அனைவரும் வெளி நோயாளிகள் அறைக்குச் சென்றோம்.அங்கு,மருத்துவரின் சில குறிப்புகள் என் மூளையில் ஏறும்;பலவற்றை நானே வழிமறித்துவிடுவேன்.அப்போது,ஒரு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அவ்வறைக்குள் நுழைந்தார்.அவரைச் சோதனை செய்யுமாறு மருத்துவர் பணித்தார்.அதன்படியே,அறைக்குள் கூடிச் சென்று,அவரின் மார்பகத்தை சோதனை செய்தோம்.முழுவதுமாக முற்றிப்போயிருந்த நிலையில் இருந்தது அவர்களின் மார்பகப்புற்றுநோய்.நான் இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவி;அவங்க நோயை ஆராய்ந்து கற்றுக்கொள்ள தான் பார்க்கிறேன் என்பதை அறியாத அந்த பாட்டி, நான் வெள்ளைக் கோர்ட்டும் ஸ்டெதாஸ்கோபும் போட்டிருக்கும் ஒரே காரணத்தினாலேயே என்னை மருத்துவர் என நம்பி,என் கையைப் பிடித்து,"எ மவனு மருமகளு இறந்துட்டாங்க,பேரப்புள்ளைங்களை நா தாயா காப்பாத்தனு.எப்படியாச்சு என்ன பொழைக்கவச்சுடுயா"னு கண்ணீர் விட்டப்போ,மனச கல்லாக்கிக்கிட்டு அவங்கள கட்டிப்பிடிச்சு,"ஒன்னு இல்ல பாட்டி,நாளைக்கே வீட்டுக்கு போய்டலாம்"னு சொன்னேன்.அந்தப் பாட்டியிடம் ஒரு மாணவியாக நான் கற்றுக்கொண்டதை விடவும்,ஒரு பேத்தியாக நிறைய யோசனை செய்ய வைத்தார்கள்.
முன்பு,சிகரெட்டும் புகையிலையும் பயன்படுத்தியவர்களுக்கு வந்த புற்றுநோய் இன்று தன் நிலைப்பாட்டை மாற்றி சின்ன குழந்தையிடமும் புகுந்துகொள்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு,கருத்தாள் எனும் என் பாட்டி,மார்பகத்தில் சிறு கட்டி இருப்பதை அவராகவே கண்டறிந்தார்.உடனே,மதுரைக்குச் சென்று பரிசோதித்தோம்.வேண்டிய அத்தனை தெய்வங்களில் எதன் கருணையோ,அது வெறும் நீர்க்கட்டி என்று முடிவு வந்தது;எங்களுக்கு உயிரும் வந்தது.
அதை நினைத்து மகிழ்ந்திருந்த பொழுது,சில மாதங்கள் கழித்து என் தாய்மாமாவிற்கு வாய்ப் புற்றுநோய் கண்டறியப்பட்டது.அவர் மருந்தகம் வைத்திருந்ததால் என்னவோ அதனை முன்னமே கண்டறிந்துவிட்டார்.ஆயினும்,என் அம்மாவின் அழுகை தேங்கவில்லை,உயிருக்கு ஆபத்தில்லை என்றபோதும்,புற்றுநோய் என்னும் வார்த்தையே அவர்களை பயமுடுத்தியது.எனது மாமா குணமாகிவிட்ட நிலையிலும்,அவர் அந்த சிகிச்சைக்காய் அனுபவித்த வேதனைகள் சொல்லிமாலாது.இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும்.
இன்றோ,புற்றுநோய் மிகச் சாதாரணம்.அதிலும் மார்பகப் புற்றுநோயோ,பெண்களின் வலிகள் என்று சொல்லப்படும் மாதவிடாய்,பிரசவம் போன்றவற்றோடு சேர்க்கப்பட்டுவிட்டது.அது பெண்களின் பொது நோயான பிறகும்,மார்பகத்தை மருத்துவரிடம் காண்பிப்பதற்கு தயக்கமும் கூச்சமும் இன்றளவும் பெண்களிடம் உள்ளது.நம் கணவனுக்கு மட்டுமே நாம் சொந்தம் ,வேறு யாராவது மார்பை பார்த்துவிட்டால் கற்பு பறிபோகும் என பயம்கொள்கிறார்கள்;உயிரைப் பற்றிய பயம் சிறிதும் இன்றி.
மருத்துவர்களான எங்களுக்கு உடலின் அனைத்து இடங்களும் உறுப்புகளே;ஆண் பெண் வேறுபாடின்றி இருவரின் பிறப்புறுப்புகளையும் நாங்கள் சோதனை செய்ய வேண்டும்;அதில் நாங்கள் கூச்சம் கொண்டால்,நோயை நாங்களே அனுமதிப்பதற்கு ஈடாகும்.கை கால்களைப் போல அதுவும் ஒரு உறுப்பு தான்.