Monday, 16 July 2018

#தலையங்கம்

இந்தியப் பெண்மையின் வெற்றி
#கழுத

இந்தியா இன்றளவும் கண்டுகொள்ள தவறிய வடகிழக்கு மாநிலத்தில்,இந்தியர்கள் கண்டுகொள்ள மறுக்கும் விவசாய குடும்பத்தில்,வயல்வெளியில் தம் மாநிலத்தின் விளையாட்டான கால்பந்தாட்டத்தை விளையாடி களித்திருந்த சிறுமியை,ஓட்டப்பந்தயத்தை நோக்கி திருப்பிவிட்டார்,ஒரு உடற் பயிற்சி ஆசிரியர்.இந்த நிகழ்வு நடந்து 18 மாதங்களே ஆகின்றன,ஆம் 18 மாத பயிற்சியில் தான் ஹிமா தாஸ் தங்கத்தை தன்வசம் ஆக்கியுள்ளார்.இந்திய சரித்திரத்தை சற்றே திருப்பிபோட்டுள்ளார்,இந்த சீமாட்டி.

ஐந்தாறு வயதிலிருந்தே பயிற்சி எடுக்கவேண்டிய ஒரு விளையாட்டில் 18 மாத பயிற்சியில் 18 வயதே ஆனா ஹிமா U20 உலக தடகள சாம்பியன் ஆகியிருக்கிறார் என்றால், நம்புவது சற்று சிரமமே.சரித்திரங்கள் படைக்கப்படும்பொழுது சில விதிகளும் சாட்டை அடிக்கு ஆளாகும்.அப்படி பட்ட நிகழ்வே இது.

ஹிமா தங்கம் வென்ற போட்டியானது,400 மீட்டர் ஓட்டப்போட்டி,அதில் பல நாட்டை சேர்ந்த வீராங்கனைகளும் ஓடிவருகின்றனர்,நம் எதிர் பார்ப்பை போலவே இந்தியாவின் சார்பில் வரும் ஹிமா பின்னோக்கியே வருகிறார்.போட்டி முடிவதற்கு 80 மீட்டர் தொலைவே உள்ளது.அப்போது பின்னாலிருந்து ஒரு புயல் வேகமெடுத்து வருவது போல் வர்ணனையாளருக்கு தெரிய,அவர் கூறுகிறார்,"Hima das,an Indian is coming forward.she is seeing the track;she is seeing the history that no one from India had become the world champion in athletic track event and atlost now she crossed the track and she made the Indian history." இதை அவர் கூறும்பொழுது வெறும் வார்தைகளாகவே அவருக்கு தெரிந்திருக்கும். ஆனால்,இந்தியர்களுக்கு மட்டுமே இதன் பின் இருக்கும் உணர்ச்சி புரிப்படும்.
சிறு வயதில் என் பாடநூலில் நேரத்தின் அருமையை உணர்த்த ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.அதில் உள்ளவாறு,உலக தடகள போட்டியில் இந்தியா சார்பாக பி.டி. உஷா ஓடிக்கொண்டிருப்பார்,அவரும் மற்றொரு வீராங்கனையும் ஒரே அளவில் போட்டியை முடிப்பர். யார் வெற்றிபெற்றார்கள் என அறிந்து கொள்ள உலகமே ஆவலாய் இருந்தது.நடுவர்கள் முடிவை அறிவித்தனர்;உஷா இரண்டாவது இடம் பிடித்தார்.ஆம்,0.01விநாடி வித்தியாசத்தில் தங்கம் இந்தியாவின் கைகளில் இருந்தும் உஷாவின் கைகளில் இருந்தும் நழுவியது.அன்று நழுவிய தங்கத்தை இன்று தட்டிபரித்து விட்டாள் ஹிமா.
அந்த வெற்றியில் சிறிதளவும் பங்கு கொள்ளாத நமக்கே கண்ணீர் மல்கும் பொழுது,இந்தப் பெருமையைத் தேடித்தந்த அந்த சிறுமியின் கண்கள் தேசிய கீதத்தை படும்போது கலங்கியதில் ஆச்சரியமேதுமில்லை.
ஆனால்,அவள் கண்களில் சிறிது பயம் எட்டிப்பாற்பதை என் உள்ளம் படம் பிடித்துவிட்டது.ஆமாம்,புதுக்கோட்டை சாந்தியைப் போல என்னையும் பாலினச் சோதனைக்கு உட்படுத்தி சீரழித்து விடாதீர்கள் எனக் கெஞ்சுகிறது அந்தக் குழந்தை.ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இல்லாத அந்த பாலின வேறுபாடு ஏன் பெண்களின் வெற்றிக்கு பின் மட்டும் முத்திரை குத்தப் படுகிறது.இது உலக அளவில் பெண்களுக்கு நடக்கும் மிகப்பெரிய அநீதி யாகும்.
கலங்காதே கண்மணி,
வெற்றி சிறிதே!வியந்துபோகதே
பெருவெற்றிக்காய் பயணப்படு
தோல்விக்கு பழக்கப்படு
வெற்றிகள் குவிய நிதானப்படு
உன் பிறப்பை இப்புவிக்கு உணர்த்திவிட்டு செல்!
சந்திப்போம் உனது அடுத்த வெற்றியில்....

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...