Tuesday, 17 July 2018

#பதிவுகள்

செட்டிநாடு சமையல்( காரைக்குடி)
#மதி

நலன், சாப்டாட்டு பிரியன், கொஞ்சம் குண்டாத்தி தான். தட தடவென சத்தத்தில் அசைந்து அசைந்து செல்லும் வெள்ளையனின் வண்டியில் (இரயிலில்) செல்லுகையில் ஒரு பாட்டி அவனிடம் சுண்டல் நீட்டுகையில் இரண்டு ஆண்டுக்கு முன் இறந்து போன அவன் ஆத்தாவின் நினைவு வந்தது.இந்நேரம் அவள் இருந்திருந்தால் இரயில் பயணத்தில் என்னென்ன எடுத்து வந்திருப்பாளோ இடியப்பமோ,கொழுக்கடையோ,அதிரசமோ,குழிப்பணியரமோ, கருப்பட்டி பணியரமோ,பால் பணியரமோ,சீயமோ,கவுணி அரிசியோ,கந்தரப்போ என்று எண்ணி கொண்டான்.காரணம் அடுத்த  ஊர் அவன் ஆத்தா வழி மாமன் வீடு, என்று நினைவுக்கு  வந்தது.அங்கு தான் அவன் சென்று கொண்டிருக்கிறான்.வீட்டை முழுதாய் சுற்றிப் பார்க்க ஒரு நாள் வேண்டும்.
  "ஆத்தங்குடி" வந்ததும் அன்பு மாமன் அக்கறையாய்
 அழைத்துப் போக வந்தான்.வீட்டை அடைந்ததும், ஆச்சியும் ஆயவும், ஆயாவோட ஆயவும் ஆசையாய்  அழைச்சங்க வீட்டுக்குளே.
"முகப்பு நிலையே கவிதைகள் பல சொல்லும் ...முகப்பு விளக்கும், முகப்பு உத்திரமும் தொங்கு சர விளக்கும், பார்த்து இமைக்காத என் விழிகளில்... முகப்பழகே முத்திரையாம் செட்டிநாடு
 வீட்டிற்கு" என்று மனம் சொல்லியது.

       முற்றத்தின் ஓரத்தில் துளசி மாடம், அழகழகாய் அறைகள், முடிஞ்சுது னு பாத்த முடியாத சமயலறை...
ஆரம்பித்தது உபசரிப்பு காப்பியோடு...

மெதுமெது இட்டிலியோடு 
கதம்பசட்டினியுமாய்....
மெத்மெத்தென்று பணியாரத்திடு
மிளகாய் சாட்டினியுமாய்....
மெதுவான வடையோடு 
தேங்காய் சட்னியுமாய்....
இனிக்கும் தங்கை பாலோடு
இடியாப்பம் செய்யட்டுமா...
இடிச்ச அரிசியோடு
குழாப்புட்டு செய்யட்டுமா...

     என்று ஆச்சி கேட்டாக,
கேட்டதே மனம் நிறைய சாப்பிட்டவுடன் வயிறும் நிறைந்தது.
அவர்களின் சமையலில் சிறப்பே அவர்கள் பயன்படுத்தும் மசாலாக்களும்,அவற்றின் மனமும் ,காரத்தின் சுவையுமாகும்.

        மதியம் வந்துடுன்னு மறுபடியும் ஆச்சி முடியாத பட்டியலிட அவன் முயன்று ஒன்றை கண்டுபிடித்தான்.வெண்மையான அரிசிச்சோற்றுடன் காய்கறி மண்டி,
அதன் அரிசி கழுவிய நீரை உபயோகிப்பது தான் அதன் சிறப்பு.
"மண்டி இருந்தால் உண்டி பெருகும் என்பது செட்டிநாடு பழமொழி".

இவ்வாறு இரண்டு நாள்களும் உணவும்,உபசரிப்புமாக முடிய கேளிக்கை பேச்சுகளும் சென்னையில் தனிவீட்டுப் பிள்ளையாக  வசிக்கும் அவனுக்கு புதியதாய் இருந்தன.கிளம்பும் நேரமும் நெருங்க பயணத்தின் போது சாப்பிட ஆத்தா கற்கண்டு சதாம் கட்டிக்கொண்டு தந்தாள். அனைவருடனும் விடைபெற்றுக் கொண்டு, கற்கண்டு சாதத்துடன் தன்னுடன் வர மறுக்கும் மனதை இழுத்துக் கொண்டு புறப்பட்டான்.

இன்று செட்டிநாடு எனும் வார்த்தை உணவு விளம்பரங்களில் மாயத் தோற்றத்திற்காக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது

 உயிர் காக்கும் உணவு "கலையாக" மருந்தாக உருப்பெற்ற நாட்டில், அயலானின் உணவுக்கு நோயை விலை கொடுத்து வாங்கும் இன்றைய தமிழகம்......ஏனோ? வினாவாக....




No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...