Sunday, 22 July 2018

#கடிதம்

#கடிதம்

#தமிழனுக்கு ஒரு கடிதம்

#மிகலி

வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி!அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றது தான்.
நம் முன்னோர் இதை மறந்த காரணத்தால் தான், எத்தன்னையோ இழந்தனர்; ஒன்று சொல்லட்டுமா?
தமிழ்க் கலை நல்ல கலை தான்; அதிலும் யாழிசை நல்ல இசைதான்; ஆனால் வாழ்ந்ததா?இல்லை, ஏன்?முன்னே செல்வாக்கைப் பெற்றவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள்; பிறகு பொதுமக்கள் மறந்தார்கள். இன்று தமிழுக்கும் ஏறக்குறைய அதே நிலை இருப்பதை எண்ணிப்பார்; உன் மனம் புண்படும்.
நீ இதை மறுக்கலாம். அன்று அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்ற நிலைமை இருந்ததை நீ எடுத்துக் காட்டலாம். இன்று பொதுமக்கள் எவ்வழி அவ்வழியே ஆட்சியாளர் என்று எடுத்துக் கூறலாம்.
இப்படி உன்னை நீ எம்மாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுதான் உனக்குச் சொல்கிறேன். பொதுமக்களின் விருப்பம் போல் ஆட்சி நடப்பதாகச் சொன்னால், பொதுமக்கள் போரை விரும்புக்கிறார்களா, அணுக்குண்டையும் பிற குண்டையும் விரும்புக்கிறார்களா, வேலையில்லாத் திண்டாட்டத்தை விரும்புக்கிறார்களா, குடி இருக்க வீடும் அறிவு வளர்க்கக் கல்வியும் உடல் வளர்க்கக் கஞ்சியும் இல்லாத கொடிய வறுமையை விரும்புக்கிறார்களா என்று மெல்ல எண்ணிப்பார். உனக்கே தெரியும்
பொதுமக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணர இன்னும் தெரியவில்லை; அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள்; யார் யாரோ நீர் சேர்த்துப் பிசைந்து தமக்கு வேண்டியவ்வாறெல்லாம் உறுவங்களைச் செய்து கொள்கிறார்கள்.
சரி,நீ சொல்கிறப்படியே பார்ப்போம்.இன்று ஆட்சி எல்லாம் ஓட்டுப் போடும் மக்களின் கைகளைப் பொறுத்தது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஓட்டுப் போடும் போது தங்களைப் பற்றியாவது தமிழ்நாட்டைப் பற்றியாவது தமிழைப் பற்றியாவது கவலைப்படுகிறார்களா?அவர்கள் கவலைப்படாத நாடும் மொழியும் யாருடைய வல்லமையை நம்பி வாழ முடியும்?வறுமையால் வாடும் அறிஞர் சிலருடைய துணை மட்டும் போதுமா?

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...