தமிழகத்தின் தனித்துவங்கள்
கல்லணை , கல்லும் களிமண்ணும் சேர்ந்ததே.........
கி.பி 2- ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் திருச்சியில் அகண்ட காவிரியின் குறுக்கே உலகின் மிக பழமையான, இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் கல்லணை கட்டப்பட்டது......
அமைந்துள்ள இடம்:
திருச்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை அமைந்துள்ளது.காவிரி ஆறானது முக்கொம்பில் கொள்ளிடம் மற்றும் கவிரியாக பிரிகிறது.கவிரியானது மீண்டும் உள்ளாறு, காவிரி,வெண்ணாறு,புது ஆறு என பிரிகிறது.உள்ளாறு மீண்டும் கொள்ளிட்டத்துடன் இணைகிறது.இந்த இடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டிருக்கிறது.வெள்ளத்தின் போது நீரானது கொள்ளிடத்திலும், பாசனகாலத்தில் காவிரி, வெண்ணாறு, புது ஆறிலும் திறந்து விடப்படுகிறது.இதனால் பல லட்சம் எக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படுகின்றன......
உருவான வரலாறு:
பிற்கால சோழன் கரிகாலன் மழைக்காலத்தில் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அழிவதையும் வெயில் காலத்தில் வறட்சி நிலவுவதையும் கண்டு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்தான்.இருப்பினும் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது எளிதானதல்ல. அதற்கும் வழியை கண்டுபிடித்தார்கள் நம் தமிழர்கள்......
தொழில்நுட்பம்:
நாம் கடலில் நிற்கும் போது அலையடித்தால் நம் கால்கள் மணல் அரிப்பினால் மண்ணில் புதையும்.இந்த விந்தையைத் தான் நம் தமிழர்கள் சூத்திரமாகக் கொண்டார்கள்.காவிரி ஆற்றில் பெரும் பாறைகளை கொண்டு வந்து போட்டனர்.மண் அரிப்பினால் பாறைகள் மூழ்கின.அவற்றின் மீது மீண்டும் பறைகளைப்போட்டு ஒரு களிமண்ணாலானா பசையால் ஒட்ட வைத்தனர்.கீழுள்ள பாறைகள் புதையப் புதைய தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன.இறுதியில் கீழுள்ள பாறைகள் கடின தளத்தை அடைந்தவுடன் பாறைகள் இறங்குவது நின்று போனது.இவற்றின் மீதே 1080 அடி நீளமும் 66 அடி அகலமும் 18 அடி உயரமும் கொண்ட கல்லணை அமைந்துள்ளது.......
பெருமை:
இன்று சிமென்டால் கட்டப்படும் அணைகளே 500 ஆண்டுகளில் பலமிழந்து போகின்றன.அவ்வாறு இருக்க கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஒரு அமைப்பு 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது அகிலம் போற்றும் அதிசயமே ஆகும்.சங்க காலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியத்தை பட்டினப்பாலை,பொருநர் ஆற்றுப்படை பாடல்களும் தெலுக்குச் சோழக் கல்வெட்டுகளும் , திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.பெருமை வாய்ந்த கரிகாலனுக்கு காவிரி கரையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது....
கல்லணையும் ஆங்கிலேயர்களும்:
கி.பி.1777ம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அணைக்கட்டி என கல்லணை குறிப்பிடப்பட்டுள்ளது.தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பாசன வரலாற்ற்றில் தனக்கென ஒரு அழியா இடம் பிடித்த சார் ஆர்தர் காட்டன் இக்கல்லணைக்கு மகத்தான அணை( GRAND ANAICUT) எனப் பெயர் வைத்தார்.அதுவே நிலைத்து விட்டது.
கல்லாலும் களிமண்ணாலும் ஆன கல்லணை...காலம் கடந்து நின்று கரிகாலனின் பெருமையை பறைசாற்றுகிறது..

No comments:
Post a Comment