#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி
தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது.தமிழ் ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் ஆனால்தவிர, தமிழுக்கும் எதிர்காலம் இல்லை என நம்பு.ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும்.கல்விமொழி என்றால் எவ்வகைக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்கவேண்டும்.குறைகள் பல இருக்கலாம்.குறைகளுக்காகத் தயங்காமல் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்க வேண்டும் என்று உணர்ந்திடு.
இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் போதாது.உன்னால் ஆனவரையில் செய், கடிதம்,மணியார்டர்,விளம்பரப்பலகை ,விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக.(மராத்தியர், குஜராத்தியர் முதலானவர்களிடம் இந்த வழக்கம் உள்ளது.)இவற்றை தமிழில் எழுதினால்,தபால்காரர், வியாபாரிகள்,வாங்கும் மக்கள் முதலியவர்களைத் தமிழ் படிக்கச் செய்வது போல் ஆகும்.இல்லையானால் அவர்கள் தமிழை மறக்கும்படி செய்வதுபோல் ஆகும்.நீ யாருடனும் தமிழிலே பேசு.(உலகத்தார் எல்லாரும் அவரவர் தாய் மொழியில்தான் பேசுகின்றார்கள்.)தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் பிறமொழியில் பேசு.திருமணம், வழிபாடு முதலிவற்றைத் தமிழில் நடத்து.
சாதி, சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்;மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்.'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'என்ற செம்மொழியைப் போற்று.
நான்குபேர் சேர்ந்தால்,அவர்களிடையே பண்பாலும் செயலாலும் கருத்தாலும் கொள்கையாலும் ஒற்றும்மையும் உண்டு; வேற்றுமையும் உண்டு.ஒற்றுமையான பகுதிகளை மட்டும் எடுத்துப் பேசு.வேற்றுமைப் பகுதிகள் இங்கு இப்போது வேண்டியதில்லை என்று விட்டுவிடு.வேற்றுமைப் பகுதிகளை வலியுறுத்திப் பேசினால் பொதுவேலை நடக்காது என்று நம்பு.
வெளிநாட்டுத் துணியை விலக்குதல் போல்,தமிழநாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாள்களை விலக்கு.நாட்டுக்கும் மொழிக்கும் இடையூறான நிலையங்களைப் போற்றாதே.உன் காசு அவற்றிற்குப் போகாமல் காத்துக்கொள்.நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் உடையவர் நடத்தும் உணவுவிடுதி, மருந்துக்கடை,துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறுது கூடுதலாக இருந்தாலும் வேறு குறை இருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு.அவசரத்தின் காரணமாகவோ, வேறு காரணத்தாலோ தவறு நேர்ந்தால், தவறு என்று உணர்ந்து வருந்து. அதற்குத் தண்டனையாக ஓர் அணா அல்லது இரண்டணா தனியே எடுத்து வைத்துச் சேர்த்து ஒரு சங்கத்திற்கு கொடுத்து விடு.கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.
உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் நாட்டையும் மொழியையும் தூற்றாதே;பழிக்காதே; வெறுக்காதே.அயலானின் தாயைப் பழித்து வெறுக்காமல் நம் தாயினிடம் அன்பு செலுத்தமுடியும்.அத்தகைய அன்பு தான் நிலையானது;நீடிப்பது.மற்றவர்களின் அமைப்புக்களையும் நிலையங்களையும் விலக்குதல் என்றால்,அவர்களை வெறிப்பதும் பழிப்பதும் பகைப்பதும் வேண்டாம்.ஏன் என்றால் வெறுத்தல், பழித்தல், பகைத்தல் இவைகள், உடையவனைக் கெடுக்கும் பண்புகள்;
இவை சேர்ந்தாரைக்கொல்லி என்று திருவள்ளுவரால் கூறப்படுவது போன்றவை.இன்று அயலாரிடம் செலுத்தும் வெறுப்பும் பழியும் பகையும் அவர்கள் வாளா இருந்தால், நாளை திரும்பிவந்து நம்மவரிடையே செலுத்தத் தூண்டும்.இறுதியில் நம்மவரையே வெறுக்கவும் பழிக்கவும் பகைக்கவும் முனைவோம்.ஆகவே தற்காப்புப் பண்புகளாகிய அன்பு பற்று கடமையுணர்ச்சி ஆகியவற்றை மேற்கொள்வோம்;தன் அழிவுத் தன்மைகளாகிய வெறுத்தல் பழித்தல் பகைத்தல் ஆகியவற்றை விட்டொழிப்போம்.

No comments:
Post a Comment