மரணம் உனதல்ல (பாகம் -2)
#தமிழ் கீதன்
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்.காலை 6 மணி .தலை நிறைய விபூதி சந்தனமும் கழுத்தில் மாலையும் அணிந்து வந்த ஏகாம்பரம், ஆதி அவன் இருக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
சோர்வாலும் நேற்று டி. ஐ. ஜி அலுவலகத்தில் நடந்த நிகழ்வாலும் அவன் கல்யாண நாளைக்கூட, மறந்துபோய் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டார்.
"சார், டைம் ஆச்சு! எந்திருங்க...மேடம் நேத்துல இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க, என்று ஆதியை எழுப்பினார் ஏகாம்பரம். விருட்டென்று
எழுந்தான் ஆதி. தான் வெகு நேரம் உறங்கியது அப்போது தான் அவனுக்கு தெரிய வந்தது.
"ஏகா, கொஞ்சம் கோச்சுக்காம வீடு வரைக்கும் வந்து ட்ராப் பன்றிங்களா? டூவீலர் வீட்ல இருக்கு" என ஏகாம்பரத்தைக் கேட்டான் ஆதி.
ஏகாம்பரம் ஆதியை அவன் வீட்டில் விட்டுச் சென்றான்.
வித்யா... என்று கதவைத் தட்டுவதற்குள் வீட்டின் முன் கதவு விளக்கு எரிந்தது. சோகம் சிறிதும் இன்றி, நேற்று காவல் நிலையத்திலேயே உறங்கி விட்டீற்களா... என அமைதியாய் வினவினாள், வித்யா.
"காபி போடுகிறேன் குடிச்சிட்டு, குளிச்சிட்டு வாங்க, டிபன் ரெடி பன்னிடுறேன்" என சமயலறைக்கு ஆயத்தமானாள்.
"அவள் கையை இழுத்து கட்டி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு, "சாரிடா செல்லம்" என்றான்.
சிறிது கசிந்த கண்ணீருடன் "சாரி எல்லாம் வேண்டாம். இந்த அன்பு போதும். உங்க சூழ்நிலை என்னனு புரிஞ்சுக்க முடியுதுங்க...டோன்ட் பீல் பேட் " என்றாள்.
"நீ இருக்கிற வரை என் வாழ்க்கைல எந்த பிரச்சனை வந்தாலும்...சமாளிச்சுருவேன்டி. நீ என் வாழ்க்கைல கிடைச்ச வரம்" புகழ ஆரம்பித்தான் ஆதி.
"இந்த சாக்குலாம் இங்க வேணாம் மிஸ்டர் எஸ்.பி. ஒழுங்கா ஃபிரீ நாட்கள்ள எங்கையாச்சும் வெளில கூட்டிட்டு போங்க" அன்பாய் அதட்டினாள்.
கண்டிப்பா டியர். சரி காபிலாம் வேணாம் நா ஒன் ஹௌர் தூங்குறேன். எழுப்பிவிடு! என கூறி தன் கட்டிலில் சாய்ந்தான்.
கண்கள் சொருகிய கணத்தில் கனவுகள் கதைகளாய் மிதந்தன.
வித்யா அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். இருவருக்கும் தேர்வு பயிற்சி நிலையத்தில் காதல் பூத்தது. இருவரும் காதல் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர்.
வித்யாவிற்கென யாரும் இல்லாததால் அவள் பக்கத்தில் எந்த தடைகளும் இல்லை.ஆனால் அதுவே ஆதி பக்கத்தில் தடையாய் அமைந்தது.வித்யா அனாதை என்ற காரணம் காட்டி ஆதி வீட்டில் ஏற்க மறுத்தனர். ஆனால் அத்தடையையும் உடைத்து இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.ஆதி வீட்டில் இவர்களை புறக்கணித்தனர்.
வித்யா கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு துணை ஆட்சியராக பொறுப்பேற்றாள்.ஆதியும் காவல்துறை அதிகாரியாக பணியேற்றான். நாளடைவில், இருவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வித்யா கருத்தரித்தாள்.அனைவருக்கும் ஏற்படும் ஆசை தான், கணவன் பெண் குழந்தை வேண்டும் என்பதும்.மனைவி கணவன் போல் ஆண் குழந்தை வேண்டும் என்பதும். ஆதியும் வித்யாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியை ஒழிக்க ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.முதலமைச்சருடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்திருந்தனர்.தன் அலுவலக ஊர்தியில் அவசரமாய் புறப்பட்டாள் வித்யா.
அவள் சென்ற ஊர்தி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது; கருவும் கலைந்தது. அது மட்டுமின்றி மற்றதொரு அதிர்ச்சி செய்தியும் காத்திருந்தது. ஏதோ ஒரு கம்பி அவள் கர்ப்பப்பையைக் கிழித்திருந்ததால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
"என்னங்க! என்னங்க! மணி 7.30 ஆச்சு .எழுந்திருங்க நேரம் ஆகுது", ஆதியை எழுப்பினாள்் வித்யா.
கண்ணீர் நிறைந்த கண்களைத் துடைத்துக் கொண்டு தன் முந்தைய நாள் வாழ்க்கை கனவாய் ஓடியதை அவன் உணர்ந்தான்.
சிறிதும் வித்யாவிடம் காட்டிக்கொள்ளாமல் குளித்துவிட்டு வித்யா தயார் செய்து வைத்த உணவை உட்கொண்டு விட்டு காவல் நிலையம் சென்றான், ஆதி.
மரணம் உனதல்ல......
-தொடரும்

No comments:
Post a Comment