Saturday, 14 July 2018

#தலையங்கம்

காலத்தின் கடைசி கருணை
#கழுத

இந்நாள், உரிமைகள் மறுக்கப்பட்டு;உடைமைகள் பறிக்கப்பட்டு;வெறும் உடலோடு மட்டும் உயிர்ப்போடு இருக்கும் மனிதர்களுக்கான நாளாகும்.என் தாய்மொழி தமிழ்;என் தாய்நிலம் தமிழ்நாடு;என் இனம் தமிழினம்,என்னும் செருக்கு கொண்ட ஒவ்வொருவரும் தலைவனங்க வேண்டிய தலை நாளாகும்.
இப்படி மட்டும் நா எழுதி இருந்த,"நா என்னத்த பண்ணிபுட்டனு நீ இப்போ பெருமைப்பட்டுக்குறன்னேன்"னு என்னைய வெழுத்துவாங்கிருப்பாறு நம்மய்யா.
நம்ம பண்ண ஒரே நல்லது,மறதி ய மறந்து ;அவ்ளோ பெரிய தலைவர் இருந்தாருங்குற சுவடாவது வச்சுருக்கோம்ல,அது தா.மறந்துருந்தாலு அவரு கவலப்படுற ஆளில்லா.சாகுறப்போ ஒரு மனுசன் கறை படியாத ரெண்டு வேஷ்டி மட்டும் தா வச்சிருந்தார் னா,வாழ்ந்த காலத்துல என்ன ஆஸ்திய சேத்திருக்க போறாரு.தமிழ்நாட்ட கொள்ளையடுச்சு சொத்து சேத்த திருடனுங்க மத்தியில தமிழ்நாட்டையே சொத்தா நினைச்சாறு,அத மூட்டகட்ட எவ திட்டம் போட்டாலு தூக்கிப்போட்டு மிதிச்சாறு.
அவரு பள்ளிக்கூடம் கட்டுனது ,எல்லாரையும் படிக்கவச்ச கதை தா நமக்கு தெரியும்.ஆனா அப்போ அரசு கிட்ட நிதியே கிடையாது.ஆனா அதுக்காக காமராஜர் மதுக்கடைகளை ஆரம்பிக்கள,"கற்கை நன்றே கற்கை நன்றே;பிச்சை புகினும் கற்கை நன்றே னு யாருயா சொன்னது.எம் புள்ளைங்க எதுக்கு பிச்சை எடுத்து படிக்கனும்.நா போய் வீடுவீடா மடிபிச்சை எடுத்து படிக்க வச்சுக்குற"னு சொன்னாரா.ஆனா,இன்னைக்கு அவரு கட்டுன பள்ளிக்கூடங்களுக்கு கக்கூஸ் கட்ட துட்டில்ல;சத்துணவுத் திட்ட முட்டையில 1100 கோடி ரூபா ஊழல் என்னத்த சொல்ல.
"நா புடுச்ச முயலுக்கு மூணு காலு"போக்கு தா இப்போ இருக்க கரை(றை)வேட்டி காரங்ககிட்ட இருக்கு.நம்ம தலைவருமே அப்பேற்பட்ட வீம்புகாரர் தாங்க, மக்களுக்கு ஒரு நல்லதுனா அந்த திட்டத்தை எப்படியாச்சும் முடுச்சுப்புடுவாறு.
அப்படி தா ஒரு தடவ வேலூர்ல தண்ணீர் பற்றாக்குறை னு பார்வையிட போயிருக்காரு,எல்லாத்தையும் பாத்துட்டு அங்க இருந்த பொறியாளர் கிட்ட,"ஆம்பூர்ல இருந்து தண்ணிய திருப்பி விட திட்டம் போடு"னு சொல்லிருக்காரு.அதுக்கு அந்த பொறியாளர் ,"ஆம்பூர் பள்ளமான பகுதி,வேலூரோ மேட்டுப்பகுதி எப்படி நா  திட்டம் போடுறது முடியவே முடியதுங்கய்யா"னு சொல்லிருக்காரு.இதச்சொல்லவா உங்கள அரசாங்கம் வேலைக்கு வச்சிருக்குன்னேன்.திட்டத்த முடுச்சு குடுத்துட்டு தா நீர் ஊருக்கு போகமுடியும்"னு கண்டிப்பா சொல்லிட்டாரு.அந்தப் பொறியாளரு வேற வழியில்லாம திட்டம் போட்டு அடுத்த நாளே கொடுத்துட்டாரு.ஐயாவு ,"இதத் தாம்யா எதிர் பார்த்தன்னேன்.நல்ல திட்டம்.நன்றி.வாழ்த்துக்கள்."ன்உ சொன்னாரு.இந்த சம்பவத்துல மிகப்பெரும் சுவாரஸ்யமே,அந்தப் பொறியாளர் வேறு யாருமில்லை ,நம்முடைய அறிவியல் தலைவர்,ஏ. பி.ஜே. அப்துல் கலாம் அய்யா தான்.இருந்தாலும் நம்ம தெர்மாக்கோல்  விஞ்ஞானிக்கு ஈடாகமுடியாதுல!
முதுகு வலியால் அவதிக்குள்ளான அமைச்சர்கள் இருக்கும் இதே தமிழ்நாட்டுல தா,ஒரு முதலமைச்சர் தன்னிகழ்ச்சி விமர்சனம் செய்தார்னா நம்பமுடியுமா.ஒரு மேடையிலே கண்ணதாசன் இவரப் புகழ்ந்து பேசிட்டு இருந்தாரு.அப்போ,"ஆங்கிலத்தில் intelligent arrogant னு ஒரு வார்த்தை இருக்கும் அது தா காமராஜரோட அறிவுக்கு பொருத்தமான சொல்லா இருக்கும்.ஆனா ,எனக்கு அதோட தமிழாக்கம் புரிபடல"னு சொல்லிருக்காரு.அதற்க்கு தலைவர் கொஞ்சம் கூட தாமதிக்காம,"கவிஞரே!அதுக்கு தா ஆர்வக்கோளாறு னு பேரிருக்குன்னேன்."னு சொல்லி சிருச்சிருக்காரு.ஆனா இன்னைக்கு முதலமைச்சர் இல்ல,அவரு திட்டத்தை விமர்சிக்க கூட உரிமை இல்லாத ஜனநாயக கைதிகளாகிட்டோ.
அமைச்சர் பதவிக்காக கொலை கூட பண்ண யோசிக்காத இந்தக் காலம் எங்க,பிரதமராக்க நாடே தயாரா இருந்தப்போ வேணாம்னு சொல்லி விலகி இருந்த காமராஜர் எங்க!அவரோட பகுத்தறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இதோ,
ஒரு சமயம் காமராஜர் நேருவை பார்க்க போயிருந்தார்,அப்போ நேரு ரொம்ப சோகம் இருந்திருக்காரு.எத்துக்குயா அயோகம் னு இவரு கேட்டதுக்கு,"இல்ல காமராஜர்,நாம சீனப் போர்ல தோத்துட்டோ,ராணுவத்தை உடனடியா பலப்படுத்தனு,அதுக்கு ஆயுதங்கள் தேவை,அமெரிக்கா கிட்ட இருந்து தா ஆயுதங்களை வங்கனு,ஆனா நம்ம கிட்ட நிதிப்பற்றாக்குறை.அவர்களு,நிதி இல்லாம தரமாட்டோ ,வேணும்னா எங்க நாட்டுல இருக்க ஒரு வங்கி உங்களுக்கு கேரண்ட்டி கையெழுத்து போட்டு பரிசீலிக்கலாம்"னு சொன்னாங்க."அப்புறம் என்ன இதுல பிரச்சனை"னு அய்யா கேட்க."ஆனா அவங்க வங்கிகள் எதுவுமே இந்தியாவை நம்ப முன்வரல"."சரி,அவங்க வாங்கி ஏதாச்சு இங்க இருக்கா"னு காமராஜர் கேட்டிருக்கர் "ஆமா,american express bank இருக்கு"."அத மூடுங்கன்னேன்"னு ஐயா சொல்ல,நேரு திடுக்கிட்டு,"ஏதாச்சு பிரச்சனை ஆகப்போகுது"னு சொல்லுறாரு."எது வந்தாலு மே பாத்துக்குற.நீங்க மூடுங்க.நமக்கு உதவி பண்ணாத அவங்க நாட்டு வங்கி மட்டும் இங்க எதுக்கு இருக்கணும்"னு காமராஜர் சொல்ல.அவ்வழியே வாங்கி மூடப்பட,அவ்வழியே அத்துணை அமெரிக்க வங்கிகளும் கடன் கொடுக்க முன்வந்தனர்.
இதுவல்லோ,தலைமை
இதுவல்லோ,தந்திரம்
இதுவல்லோ,சாமர்த்தியம்.
அவரோட ஆட்சி தமிழ்நாட்டுல நடந்துட்டு இருந்த நேரம் ,அவரோட உதவியாளர் ஒருத்தர் வந்து,"அய்யா ,நம்ம நிறையா நல்லது பண்ணியிருக்கோ.ஆனா,அதுலா மக்களுக்கு எடுத்துச் சொல்ல விளம்பரம் பண்ணணும்யா"னு சொல்லிருக்காரு."நம்ம என்னத்த செஞ்ஜோம்னு விளம்பரம் செய்ய சொல்லுற. சரி,விளம்பரம் செஞ்சா எவ்வளவு சிலவு ஆகும்"."ஒரு 2லட்சம் வருமுங்கய்யா"னு அவரு சொல்லி முடிக்கிறதுக்குள்ள காமராஜர் எழுந்து ,"என்னது 2 லட்சமா, இவ்ளோ காசு இருந்தா எம் புள்ளைங்களுக்கு,நாலஞ்சு பள்ளிக்கூடம் கட்டிபுடுவனே.விளம்பரம் வேணா ஒரு மண்ணு வேணா வேலையப்பருங்க"னு சொல்லி இருக்காரு அந்த பெருந்தலைவர்.ஆனா,இன்னைக்கு ஓராண்டு சாதனைக்கு 1000 கோடி,ஈராண்டுக்கு ஈராயிரம் கோடினு செலவு செய்யுறாங்க.இதக் கேட்டுப்புட்டா குத்தமுன்னு குண்டர் சட்டம் போடுறாங்க.
ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர்,அய்யா கிட்ட,"எது அரசியல் யா ?"னு கேட்க."தண்ணீர் வரலனு மக்களெல்லா ரோட்டுல நின்னு போராடிக்கிட்டிருக்காங்க.அவங்கள பாக்க நா போற இதுதாம்யா அரசியல்."
உயிர்க்கொல்லியான புற்றுநோய்க் கொடுத்து ,பல வருடங்களா தண்ணீருக்கு கஷ்டப்பட வச்சு,வஞ்சனை செய்யுற ஒரு தொழிற்ச்சாலைக்கு எதிரா கிளம்பிய ஒரு கிளர்ச்சிக்கூட்டம்,பல ஆயிரம் போராளிகள் கொண்ட ஒரு கூட்டத்தை,ஜனநாயகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கு என்கிற மூடநம்பிக்கை உள்ள ஒரு கூட்டத்தை,பார்வையிட ஹெலிகாப்டரில் போயிருந்தாலும் கூட பரவால; போகாம இருந்திருந்தா கூட பரவாயில்லை.ஏதோ,நாயைக் கல்லால் அடிச்சுத் தொரத்துரது போல,துப்பாக்கிக் குண்டால் கலச்சுவிட்டிருக்காங்கய்யா.இது எதுக்குமே இன்னும் நியாயம் கிடைக்கவில்லையா,வெறும் இழப்பீட்டுத்தொகை தா அறிவிக்கப்பட்டிருக்கு.உயிரை வெறும் காகிதத் தாள் ல எடை போடுற இந்த கிருக்கணுங்கல எப்படி யா சமாளிக்க போறோம்.
தேர்தல் ல தோத்தப்போ கூட ஜனநாயகம் ஜெயிச்சிருச்சுன்னு சந்தோசப்பட்டவரு நீங்க,இப்போ இருந்திருந்திங்கனா உங்களோட கருத்துரிமை கூட நாட்டின் நலன் கருதி பரிக்கப்பட்டிருக்கும்;நீங்களும் நக்சலைட் என்னும் தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவராக முத்திரை குத்த பட்டிருப்பீர்.
நீங்க சொன்னதும் செய்ததும் தா யா அரசியல்,
உங்களைப் பிரிந்த பிரிவாற்றாமையால் உங்கள் உடல் கூடவே உடன் கட்டை ஏறியது நம் அரசியலும்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் அரசியலுக்கும்.

1 comment:

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...