Tuesday, 24 July 2018

#தொடர்கதை

 மரணம் உனதல்ல!!!!
# தமிழ் கீதன்

காலை 11 மணி.  கோவை மாநகருக்கு வெளிப்புறமாக  SPG நகாில் நன்கு இயற்கை வசதி வாய்ந்த ஒரு நல்ல தனிமை வாய்ந்த விடு.கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து தலைநிறைய மல்லிகைப் பூவுடன் விதவிதமாய் சமைத்துக் கொண்டிருந்தாள் , வித்யா.ஆனால் , இந்த வருடமும் தன் திருமண நாளை மறந்தவனாய் காலையிலேயே காவல் நிலையம் சென்றுவிட்டான்,ஆதி. எனினும் ஆதி தன் பணிச்சூழலிலே அதிக நேரம் செலவிடுவதை வித்யா வருத்தத்துடன் எதிா்கொண்டதே இல்லை .காரணம் , வித்யாவும் மாவட்ட துணை ஆட்சியராக சிலகாலங்கள் பணிபுாிந்தவள் .ஆதியின் பணி முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவள் .எனவே ,ஆதி மதிய உணவுவேளைக்கு வரும்போது அவனை ஆச்சாியாபடுத்த தான் இந்த விருந்து சமையல்.
     காவல்துறை கண்காணிபாளா் அலுவலகம் (SP office). "ஏகாம்பரம் ! வண்டிய எடுங்க, பக்கத்துல கடைக்கு வரைக்கும் போய்ட்டு வரலாம்" என தன்னுடன் நீண்ட நாள் பணிபுாியும் ஏட்டையாவை அழைத்தான். "இதோ வரேன் Sir " என கூறி தான் எழுதிக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுப் புறப்பட எத்தனித்தாா் , ஏகாம்பரம்.
       வண்டியின் இயந்திரத்தை ஓடவிட்ட பிறகு , " எங்க sir  போகனும் என வினவினாா் ஏகாம்பரம்." பக்கத்திலுள்ள நகைக்கடை வரை போங்க " என கூறினான் ஆதி.
வண்டி , அலங்காித்த நகைக்கடை வாசலிலே சென்று நின்றது .வரவேற்பு , அழகிய பெண்ணுடனும் ஒரு குளிா்பானத்துடனும் காத்திருந்தது. வந்த வெயிலில் களைப்பாறுவதற்குள் ஒரு அழகிய 'நெக்லசை' தோ்ந்தெடுத்தான் ஆதி. நெக்லசின் விலையை கேட்டான். அவனிடம்  இருக்கும் பணத்தை விட ₹5000 அதிகம் கூறினாா் கதா்சட்டை அணிந்த அந்த கடைக்காரா்.
  கையை பிசைந்து கொண்டே செய்வதறியாது முழித்தான் , ஆதி .அவன் முகச்சாடையை வைத்தே விசயம் அனைத்தையும் ஏகாம்பரம் புாிந்து கொண்டாா்." நம்மள மாதிாி ஆளுக்கு மாசக்கடைசினாலே இப்படி தான். கைய நீட்ட வேண்டிய இடத்துல நீட்டிருந்தா இப்போ நம்ம யாா்கிட்யுைம் கைய ஏந்தி நிக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது " என புலம்பினாா் , ஏகாம்பரம்.
  " என்ன ஏகா பன்றது , அதுக்காக எல்லாரு மாதாி லஞ்சம் வாங்க சொல்றியா, ஏதோ இன்னைக்கு கல்யாண நாளாச்சே அவளுக்கு ஏதாவது வாங்கிட்டுப் போலாம்னு நினைச்சேன் " என ஆதி கூறி முடிப்பதற்கு முன்பே மறித்தார் ஏகாம்பரம்.
   "கல்யாண நாளா?" சொல்லவே இல்ல. வாழ்த்துக்கள் சார். இருங்க என் ஏ.டி.ம். கார்டுல போய் பணம் எடுத்துட்டு வந்துடுறேன். என அன்பாய் ஏகாம்பரம் கூறினாா்.ஆதி மீது அவா் கொண்ட அதிக அக்கறையயையும், மரியாதையையும் அவர் என்றும் குறைத்துக்கொண்டதே இல்லை.
  " இல்ல பரவால்ல ஏகா, வேற விலை கம்மியா வாங்கிக்கலாம் " , ஆதி முனுமுனுத்தான்.
      " விடுங்க sir, என் மகன் மகளுக்கு , நா செய்ய மாட்டேனா" என கூறி வெளியே கிளம்புவதற்குள் ஏகாவிற்கு அலைபேசி அழைப்பு  வந்தது .
அலைபேசியில் பேசிவிட்டு திரும்பினாா். Sir ,A2 police stationல இருந்து inspector தான் பேசினாா். அவுங்க area councillor death ஆம் .உங்கள வரமுடியுமானு கேட்க சொன்னாா்.
  " அவுங்க area death தான அவுங்களே formalities முடிக்கலாமே"
"இல்ல sir ; நம்ம புது DIG  madam அவந்திகாவும் வராங்களாம்.அதான் நீங்களூம் வந்தா நல்லாருக்கும்னு சொன்னாா்".
  ஒ ! அப்படியா ! இத முன்னாடியே சொல்ல வேண்டியது தானே .அந்த Madam இவ்ளோ சின்ன வயசுலேயே இந்த பொிய பதவிக்கு வந்ததுக்கு காரணம் அவுங்க புத்திசாலித்தனமும் அவுங்க திறைமையும் தான்.நம்மள மாதிாி அவுங்களும் கரை படியாத கைனு வைசுக்கோங்களே.ஆனால் Madam ரொம்ப strict .வாங்க உடனே spotக்கு போலாம்
  " Sir, இந்த நகைய அப்புறம் வாங்கிக்கிறோம்" என இருவரும் அவசரமாய் புறப்பட்டனா்.
 இருவரும் அந்த இடத்திற்கு சென்ற சிலநிமிடங்களிலே DIG அவந்திகா வந்தாா்.இடத்தை நன்றாக கூா்ந்து கவனித்தாா்.
"மிஸ்டர் ஆதி , i want you to report me about  this Case as soon as  possible." என கூறி விட்டு கிளம்பினார் . சிறிது நேரம் கழித்து , D.I.G, அலுவலகம் புறப்பட்டான்,ஆதி. சிறிது நேரம் காத்திருப்பிற்கு பின், அவந்திகா இருக்கும் அறையை அடைந்தான்.
"குட் ஈவினிங் mam,.இறந்த ஆளு அந்த வார்டு கவுன்சிலர் mam, பெயர் துரைராஜ் வயது 48, இறந்தவர சுத்தி கொலை செய்யயபட்ட மாதிரி எந்த evidence ம், இல்லை  , so, we think most probably the natural death  ,and waiting for postmortem report mam அவரோட அந்த gym ல இருந்து அவர் mobile போனோட 50,00,000ரூபாய் பணமும்  கைப்பற்றி இருக்கோம் .இது தான் litte பிட் confusing" என கடகடவென ஒப்பித்தான் ஆதி .
ஆதி இந்த department ல நல்லவனா இருந்தா மட்டும் போதாது .புத்திசாலியாகவும் இருக்கணும் .அங்க உள்ள treadmill switch on லேயே இருந்திச்சி.அது மட்டும் இல்லாம அவர் body கு பக்கத்துல some amount of pollen grains (மகரந்த தூள்)கிடந்துச்சு . But அந்த மாதிரி எந்த மரமோ செடியோ அங்க பக்கத்துல இல்ல .plus நீங்க சொன்ன மாதிரி 50,00,000 ரூபாய் பணம். இதுலாம் வச்சி பாக்குறப்போ ,Do you think that  this is a natural death ?"வினவினார், அவந்திகா.
" Sorry mam" என வெட்கத்தோடு தலை குனிந்தான்.
ஆதி, "Dont be gentle; be smart and update me the case regularly .U can go now!அதட்டினாள் அவந்திகா.
பெரும் வெட்கத்துடனும் சோகத்துடனனும் காவல் நிலையம் திரும்பினான் ஆதி.
                                                                                             -தொடரும்.




1 comment:

  1. Wow.. .... Superb. ..
    Expecting for next with exultant.....

    ReplyDelete

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...