தமிழக ஊர்களின் சிறப்புகள்
தேனி
#நிலா,
உலகையே சுற்றி திரிந்து கொண்டிருக்கும் நான் கண்ட அதிசய, அழகிய மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு சிறந்த மாவட்டத்தைப் பற்றி கூறுகிறேன்.
"அன்பும் பண்பும் வளமும் செழிப்பும்
கொண்டு எழில் மிகுந்த இடமாக திகழும்
இயற்கையின் குழந்தை என்று அழைக்கப்படும்
தேனியின் அருமை பெருமைகளை காண்போம்"
சீரும் கங்கையை சீசாவில் அடைக்க நினைக்கும் செப்படி வித்தைக்காரனைப் போல, தேனி மாவட்ட அருமை பெருமைகளை சில பக்கங்களில் நிரப்ப முயற்சிக்கிறேன்.
" இது ஒரு சுரங்கம். தோண்ட தோண்ட தொடர்கிறது
இது ஒரு சாரகம். தேட தேட விரிவடைகிறது.....
கண்ணகி கோட்டம் முதல் சின்னமனூர் செப்பேடுகள் வரை
சமணமலை முதல் மேகமலை வரை ...ஆயிரமாயிரம் உண்டு.
தோற்றம்:
1996 வரை தன் எழில்மிகு செழிப்பை மதுரையினுள் அடக்கி,1997 -இல் எரிமலையாய் வெடித்து மதுரையிலிருந்து பிளவுப்பட்டு அதன் வளத்தையும் பெருமையையும் காட்டத் தொடங்கியது.
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திரும்பிய திசையெங்கும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும் மலைகள் தான்.
' உயிரற்ற கல்லும் மலையும் கண் சிமிட்டி பார்க்கும்அளவிற்கு பச்சை பசேலென்று நிலங்களும் ,பயிர்களும்,அக்கல்லும் மலையும் எழுந்து நடமாடும் அளவிற்கு பற்பல இசைகளைக் கொண்ட இயற்கையான தூய்மையான காற்றும் 'இவ்விடத்தின் அதிசய சிறப்பு.
பெயர்க்காரணம்:
தேனியில் தற்போது உள்ள " நேரு சிலை"அமைந்துள்ள இடம், அந்த காலத்தில் " முக்கூட்டுச் சாலை " எனப்பட்டது.இவையே இவ்வூருக்கு தேனி என பெயர்சூட்டக் காரணம்.
அந்த முக்கூட்டு சாலையில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அருகில் உள்ள சந்தைக்கு வரும் விவசாயிகள் ஓய்வு எடுக்கும் இடமான அம்மரம் விளங்கியது.
தூரத்தில் இருந்துப் பார்க்க அவ்விடம் கூட்டமான தேனீக்கள் மொய்ப்பது போல தெரியுமாம். இதனால்" தேனி "என்றழைக்கப்பட்டது.
தேனிக்குச் சிறப்பான அதன் இயற்கை அமைப்பு:
நம் அனைவரின் மனதை நிம்மதியக்கும் வகையில் இயற்கை வளமும் , பசுமையும் மேற்கு தொடர்ச்சி மலையும் மற்றும் இயற்கையின் வனப்பும் செழிப்பும் அடடே! என்ன ஒரு அழகு.
முல்லைப் பெரியாறு அணை , மஞ்சளாறு அணை, சொத்துப்பாறை அணை, வைகை அணை, சண்முகாநதி அணை என நீர் வளம் நிறைந்த பகுதி.
இத்தகைய இயற்கை அமைப்பிற்கு முக்கிய காரணமாக விளங்கும் தென்மேற்குப் பருவகாற்றும், வடகிழக்குப் பருவகாற்றும், அதோடு மட்டுமல்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் நம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் முல்லை பெரியாறும்,வைகை ஆறும் பாய்ந்து செழிப்பினை மென்மேலும் அதிகரித்து நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தேனியின் வேளாண்மை பற்றி சிறிதளவு:
வேளாண்மை என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் விவசாயிகளே. "நிலம் ,நீர் ,காற்று "இவையனைத்தும் நம் வாழ்வின் ஆதாரமாக விளங்குவது போல,விவசாயிகளும் நம் வாழ்வின் முக்கிய ஆதாரங்களே.
" அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை "என்று கூட நாம் சொல்லலாம். தேனியின் இத்தகைய பெருமைக்கும் ,செழிப்பிற்கும் ,வளத்திற்கும் முக்கிய காரணமும் இவர்களே.
தமிழகத்தின் 50 % உணவு தேவைகளை பூர்த்தி செய்வது நம் தேனியே. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா, உலகம் முழுவதும் தேனியின் பெருமை பரவியுள்ளது.
' நெல்,கரும்பு, திராட்சை, காலிப்பிளவர்,முட்டைகோஸ், பீட்ருட், கேரட் ,முள்ளங்கி போன்றவற்றையும்
பருத்தி, சோளம், கேழ்வரகு, முந்திரி, பயறுவிதைகள்,தென்னை, பலா, வாழை, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, கருப்பு திராட்சை ஆகியவற்றை சென்னை, மதுரை மற்றும் பல அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
டெல்டாவுக்கு அடுத்து நெல் விளையும் பகுதி நம்' கம்பம் பள்ளத்தாக்கு' அவை நம் முல்லை பெரியாறு பாசனத்திலே.பல ஊர்களின் காய்கறிச் சந்தைகளிலும் உள்ள ஒவ்வொரு விளைபொருளுக்கும் தொப்புள் கொடியாக கம்பம் பள்ளத்தாக்கு விளங்குகிறது.
நம் ஊர்களில் கிடைக்கும் இனிப்பான திராட்சையின் பிறப்பிடமும்நம் தேனியே. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது 'கரும்பு' ,அத்தகைய சுவை மிகுந்த கரும்பினை பெரும்பாலும் அளிப்பது சின்னமனூர், பெரியகுளம்.
வெளிநாடுகளுக்கு பறக்கும் சின்னமனூர் வெற்றிலைக்கு தனிச் சிறப்பு உண்டு.
போடிநாயக்கனூர் என்றவுடன் நம் அனைவரின் நெஞ்சத்திலும் நீங்கா இடத்தைப் இடத்தை பிடிப்பது 'ஏலக்காய் தான்'.
" தேனி என்றாலே மனக்கும் ஏலக்காய் தானே" அடடே!
அங்கு சாகுபடி செய்யப்படும் இலவச பஞ்சும் ,இவ்விடத்திற்கு தனி மவுசினை சேர்க்கிறது.
சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் பஞ்சுகள் மென்மையான மெ த்தைகள் செய்யப்பட்டு காஷ்மீர், ஊட்டி, சீனா, நேபாளம் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் இதனைப் பொறுக்காத அரசு" நியூட்ரினோ" என்ற திட்டத்தை கொண்டு விவசாய நிலங்களையும், இயற்கையின் செழிப்பையும் அழிக்க முன்வந்துள்ளனர்......
_ தேனியின் சிறப்புகள் தொடரும்...

அருமையான பதிவு #நிலா#
ReplyDelete